10 ஆண்டுகளுக்கு முன் Motorola நிறுவனம் இந்த வளர்ச்சி மண்டலத்தில் நுழைந்ததிலிருந்து வேகமாக வளர்ந்து வருகிறது. தற்போது, இந்த வளர்ச்சி மண்டலத்தில் Motorola நிறுவனத்தின் மொத்த முதலீடு 300 கோடி அமெரிக்க டாலரை எட்டியுள்ளது. அது 5 ஆலைகளை நிறுவி, 10 ஆயிரம் பணியாளர்களைக் கொண்டுள்ளது. அதன் மொத்த விற்பனை அளவு 5000 கோடி அமெரிக்க டாலராகும். தியான் ஜின் வளர்ச்சி மண்டலம் Motorola நிறுவனத்தின் உற்பத்தி மையமாக மாறிவிட்டது. இவ்வாண்டு சுமார் 50 புதிய உற்பத்தி பொருட்கள் இங்கு உற்பத்தி செய்யப்படும் என்று சேன் லெய் கூறினார்.
Motorola நிறுவனம் போல், கடந்த சில ஆண்டுகளில், பல அந்நிய முதலீட்டு தொழில் நிறுவனங்கள் தியான் ஜின் வளர்ச்சி பிரதேசத்தைத் தெரிவு செய்து முதலீடு செய்துள்ளன. ஆண்டுதோறும் இங்கு வரும் முதலீடு 100 கோடி அமெரிக்க டாலரைத் தாண்டுகிறது.
குறிப்பிடத்தக்க சாதனையினால், கடந்த 8 ஆண்டுகளில், சீனாவில் முதலீட்டு சூழ்நிலை மிகவும் சிறந்து விளங்கும் தேசிய நிலை பொருளாதார மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சி மண்டலங்களில் ஒன்றாக தியான் ஜின் வளர்ச்சி மண்டலத்தை சீன வணிக துறை அங்கீகரித்துள்ளது. மேலும், உலகில் விரைவான தொழில் வளர்ச்சி உள்ள 100 மண்டலங்களில் ஒன்றாக அது ஐ.நா. தொழில் வளர்ச்சி அமைப்பினால் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
உலகளாவிய பதனீட்டு மற்றும் உற்பத்தி மையமாகவும் புதிய உயரிய தொழில் நுட்பப் பொருட்களை உற்பத்தி செய்யும் தளமாகவும் மாறி விடுவது, தியான் ஜின் வளர்ச்சி மண்டலத்தின் வளர்ச்சி குறிக்கோளாகும் என்று இப்பிரதேசத்தின் பணி கமிட்டி தலைவர் பி சியான் செய்தியாளரிடம் கூறினார்.
"தொழில் துறையின் மேம்பாடு, வட்டார பொருளாதாரத்தின் சீராக்கம், அதன் பங்கின் முழுமையாக்கம் ஆகியவற்றில் புதிய வழிகளை தேடியெடுப்பது, எதிர்கால வளர்ச்சிக்கு முக்கிய அம்சமாகும். உலகத்தை எதிர்நோக்கி, வெவ்வேறான பண்பாடு, மனித குலம் வாழ்வது மற்றும் வளர்வதற்கு ஏற்ற நவீனமயமாக்க வளர்ச்சி பிரதேசமாக இது கட்டப்படுவது உறுதி" என்றார் அவர். 1 2 3
|