• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-08-11 17:11:12    
தர்பான்(TURPAN)நகரம்

cri

சீனாவின் சிங்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தில் தர்பான் நகரம் அமைந்துள்ளது. கடல் மட்டத்திற்கு 154 மீட்டர் தாழ்வாக அமைந்துள்ள தர்பான நகரமானது, சீனாவின் மிகத் தாழ்வான நகரமாகவும், உலகின் இரண்டாவது மிகத் தாழ்வான நகரமாகவும் விளங்குகின்றது. மிகவும் வெப்பமான பகுதியாகவம் காணப்படுகிறது. உயர் வெப்ப நிலை 49.6 டிகிரி செல்சியஸை எட்டுகிறது. தலைநகரான உருமுச்சிக்குத் தென்கிழக்கே 140 கிலோமீட்டர் தொலைவில் தர்பான் அமைந்துள்ளது. அழகிய இயற்கை காட்சிகளுக்கும், வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இடங்களுக்கும் பெயர் போனநகரம் இது. தர்பானில் காண வேண்டிய இடங்களில் முதலிடம் பெறுவது ஜுவாலை மலை. மேற்கு நோக்கிப் பயணம் எனும் மிங்க வமிச காலப் புதினத்துடன் இது இணைத்துப் பேசப்படுகிறது. இந்த மலையின் நீளம் 100 கிலோமீட்டர். அகலம் 10 கிலோமீட்டர். சிவப்பு நிறக் கற்கள் உள்பட பலவகை கற்களால் ஆனது. கோடை காலத்தில், மிகுதியான சூரிய ஒளி காரணமாக, தீப் பிழம்பு போல் மலை காணப்படுகிறது. எனவே, ஜுவாலை மலை என்று பெயர் வழங்கப்படுகிறது. திராட்சை பள்ளத்தாக்கு என்பது தர்பானில் காண வேண்டிய மற்றொரு காட்சித்தலஸமாகும்.

நகருக்கு வடகிழக்கில் 13 கிலோமீட்டர் தொலைவில் இந்தப் பள்ளத்தாக்கு அமைந்துள்ளது. இதன் நீளம் 8 கிலோமீட்டர். பள்ளத்தாக்கின் அடிவாரத்தில் திராட்சை தோட்டங்கள் கண்ணுக்கு விருந்து படைக்கின்றன. குளிர்ந்த காற்றில், திராட்சைக் குலைகளிலிருந்து பழங்களைக் கொத்தாகப் பறித்து, ஒவ்வொன்றாகச் சுவைக்கும் வாய்ப்பு சுற்றுலாப் பயணிகளுக்கு இங்கு கிடைக்கிறது. பழங்காலத்தில், பட்டுப்பாதையில் முக்கியமான ஒரு நகரமாக தர்ப்பான் விளங்கியது. அப்போது, கால்சாங் (GAOCHANG)என்பது இதற்குப் பெயராக இருந்தது. மற்றொரு குறிப்பிடத்தக்க காட்சித்தலம் என்று ஜியாஹே நகரைக்(JIAOHE CITY) கூறலாம்.

1  2  3