
பழங்காலத்துச் சீன இஸ்லாமியக் கட்டிடங்களின் சிறப்பியல்புகளைக் கொண்டதாக இது விளங்குகிறது. தர்பானில் உள்ள 75 விழுக்காட்டு விளைநிலம் கரேஸ்(KAVEZ)எனும் பாசன முறை மூலம் தண்ணீர் பெறுகின்றன. சீனாவின் அரிய முறைகள் மூன்றில் கரேஸ் ஒன்றாகும். கிணறுகள், தரைக்கடி நீர்ப்போக்குவரத்துடன் இணைக்கப்பட்டு, தரைக்கடி நீரை மேலே கொண்டுவரச் செய்யும் அமைப்பு முறைக்கு கரேஸ் என்பது பெயர். தர்பான் நகருக்கு வருகை தருவோர், தரைக்கடியில் சென்று இந்த அமைப்பைக் காணலாம். தரைக்கடி சுரங்கப்பாதையில் நடப்பதன் மூலம் கோடை வெயிலின் கொடுமையிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம். தர்பானில், 5 ஆயிரம் கிலோமிட்டர் நெடுகிலும் மொத்தம் 1200 கரேஸ் அமைப்புகள் உள்ளன என்பது வியப்பைத் தருகிறது. சீனாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள சிங்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் தர்பான் நகரம், வாழ் நாளில் தவறாது காண வேண்டிய இடம் என்பதில் இரு வேறு கருத்து இருக்க முடியாது. 1 2 3
|