• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-08-11 17:11:12    
தர்பான்(TURPAN)நகரம்

cri

தர்பானுக்கு மேற்கே 10 கிலோமீட்டர் தொலைவில் ஜியாஹே அமைந்துள்ளது. அங்கு, நகரின் சிதிலங்களைக் காணலாம். பாதுகாப்புக்கான இயல்பான சுவர்களை அது கொண்டிருந்ததாகக் கருத வாய்ப்பு உண்டு. புதிதாகக் கட்டப்பட்ட சரிவான மண் சாலை, நகருக்குள் நம்மை இட்டுச் செல்கிறது. நகரின் தெற்குப் பக்கத்தில் அரசு அலுவலகக் கட்டிடங்களும் வீடுகளும் காணப்படுகின்றன. வடக்குப் பக்கத்தில் கோவில்களும், பௌத்த பகோடாக்கள் எனப்படும் கோபுரங்களும் உள்ளன. வடக்குப் பக்கத்தின் முனையில், கல்லறைகள் காணக்கிடக்கின்றன. 1994இல், ஜியாஹேயில் பழமையான கோயில் ஒன்று தோண்டியெடுக்கப்பட்டது. அஸ்தானா-கரகோஜா கல்லறைகள் (ASTANA KARAKHOJA TOMBS)மிகவும் பழைமையானவை. தர்பானுக்கு தென் கிழக்கே 40 கிலோ மீட்டர் தொலைவில் இவை அமைந்துள்ளன. 8 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டுள்ளன. மூன்றாம் நூற்றாண்டுக்கும் எட்டாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இவை கட்டப்பட்டதாகத் தெரிகிறது.

அரண்மனை அதிகாரிகளின் மற்றும் பொது மக்களின்"இறுதி ஓய்வுக்கான இடமாக"அமைந்துள்ளது. இந்தக் கல்லறைகளிலிருந்து சுவர் ஓவியங்கள், கடிதங்கள், புத்தகங்கள், எழுதுகோல், தூரிகை எனப் பல கண்டெடுக்கப்பட்டன. இந்தக் கண்டுபிடிப்பானது, "தர்பான் இலக்கியம்"எனப் போற்றப்பட்டு, சர்வதேச தர்பான் ஆய்வுக்கு வழிவகுத்தது. தர்பானில், இதுவரை, பழமையான 400 கல்லறைகள் தோண்டியெடுக்கப்பட்டிருப்பது அறியத் தக்கது. தர்பானுக்கு 56 கிலோமீட்டர் வடகிழக்கில் உள்ளது பெஸெக்லிக் ஆயிரம் பௌத்த குகைகள்(THE BEZEKLIK THOUSAND BUDDHA CAVES). உய்கூர் மொழியில், பெஸ்கலிக் என்னும் சொல்லுக்குஸ "ஓவியம் மிகுந்த இடம்"என்பது பொருளாகும். ஆறாம் நூற்றாண்டில் இந்தக் குகைகள் கட்டப்பட்டதாகத் தெரிகிறது. தங் வமிச ஆட்சிக்காலத்தில், பௌத்த மதத்தின் முக்கிய இடமாக இது விளங்கியது. இங்குள்ள 83 செயற்கைக் குகைகளில், 40 இல், சிதைக்கப்படாத சுவர் ஓவியங்கள் கண்ணுக்கு விருந்தாகின்றன தர்பான் நகரில் தவறாமல் காண வேண்டியிருப்பது எமின் பள்ளிவாசல் தூபி (EMIN MINARET)சு காங் தா(SU GONG TA) என்று சீன மொழியில் இது வழங்கப்படுகிறது. சீனாவில் உள்ள மிகப் பெரிய பள்ளிவாசல் தூபி இதுவாகும். தர்பானை ஆண்ட எமின் கோஜா(EMIN KHOJA)எனும் மன்னரால் இது கட்டப்பட்டது. 71 படிக்கட்டுகளில் ஏறினால், இதன் உச்சியை அடையலாம். தூபியை அடுத்துள்ள மசூதி அல்லது பள்ளி வாசலானது, தர்பானில் உள்ள மிகப் பெரிய மசூதியாகும்.

1  2  3