
பெய்ச்சிங் மாநகரின் மேற்கு பகுதியில் தைய்லாச்சியோ என்னும் தாய்லாந்து உணவகம் அமைந்துள்ளது. லாச்சியோ என்றால் தமிழில் மிளகாய் என்று பொருள். இந்த உணவகத்தில் தாய்லாந்தின் அசலான காய்கறிகள் கிடைப்பதோடு, மெய்னான் ஆற்றங்கரையில் அமர்ந்து உணவு உண்ணும் உணர்வும் ஏற்படுகிறது. ஆனால், முன்பு தாய்லாந்தில் மட்டும் இத்தகைய உணர்வு ஏற்பட்டது என்று பெய்ச்சிங் மக்கள் கூறினர். இது பற்றி செல்வி சூசியெ கூறியதாவது, சாப்பாட்டு மேசைக்குப் பக்கத்தில் சிற்றாறு ஓடுகின்றது. நீர் அதிகம் இல்லை என்றாலும் நீரோட்டத்திற்கு அருகில் அமர்ந்திருப்பது போன்ற உணர்வு உண்டாகிறது. ஆற்று நீரில் தாமரைப் பூக்கள் மலர்ந்துள்ளன. மீன்கள் துள்ளி விளையாடுகின்றன.

உணவு உண்ணும் போது, தண்ணீர் ஓடும் ஓசை ஒலித்துக்கொண்டே இருக்கிறது. இதனால், தாய்லாந்தின் மெய்னான் ஆற்றங்கரையில் உணவு உண்பது போன்ற உணர்வு தோன்றுகின்றது என்றார் அவர். தாய்லாந்தின் பாரம்பரிய ஆடை அணிந்த பணியாளர்கள், இங்கு வருகை தரும் அனைவரையும் கை கூப்பி வணங்கி வரவேற்கின்றனர். அப்போது முதலே தாய்லாந்து மணம் கமழும் பழக்கவழக்கங்களை விருந்தினர் உணரலாம். உணவகத்தின் நுழைவாயிலில் சுவர் ஒன்று உள்ளது. தாய்லாந்திலிருந்து கொண்டுவரப்பட்ட புத்தர் சிலையொன்று அதில் செதுக்கப்பட்டுள்ளது. விளக்கு ஒளியில், இப்புத்தர் முகம் வழியாக நீர் ஓடிவருவதைக் காணலாம். இங்கிருந்து கீழே பாயும் நீர், உணவகத்தின் உட்புறத்தில் நுழைகின்றது என்று இவ்வுணவகத்தின் உரிமையாளர் ருவெய்மிங் எமது செய்தியாளரிடம் கூறினார்.
1 2 3
|