
நீரோட்டம் மூலம், தாய்லாந்து ஆற்றுப் பண்பாட்டை வெளிப்படுத்தி, தாய்லாந்தின் மெய்னான் ஆற்றங்கரை பக்கத்தில் இருப்பது போன்ற உணர்வை விருந்தினருக்கு ஏற்படுத்துவதே தமது நோக்கம் என்றார் அவர். உணவு விடுதியின் அலங்காரம் பற்றி அவர் கூறியதாவது, இங்கு நீர் ஓடும் சுவர் ஒன்று உள்ளது. தாய்லாந்தின் தனிச்சிறப்பை ஏற்படுத்த விரும்புகின்றேன். வேளாண் துறையின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் நாடு தாய்லாந்து. பண்பாட்டின் ஊற்று மூலமான ஆற்றிலிருந்து தாய்லாந்தின் வேளாண்மை துவங்கியது. சீனாவின் ஆற்று மூலம் மஞ்சள் ஆறும் யாங்சி ஆறும் ஆகும். தாய்லாந்தைப் பொறுத்தவரை, மெய்னான் ஆறு மட்டுமே உள்ளது. இந்தக் கருத்தைக் கொண்டு இவ்வாறு செய்திருக்கின்றேன் என்றார் அவர். சீன ஹாங்காங்கைச் சேர்ந்த ருவெய்மிங், உள் அலங்கார நிபுணர். பெய்ச்சிங்கில் தாய்லாந்தின் பழக்கவழக்கங்களை முழுமையாகவும் நேர்த்தியாகவும் வெளிப்படுத்துவதற்காக, தைய்லாச்சியோ உணவகத்திலுள்ள பல கட்டடப்பொருட்களும் அலங்காரப்பொருட்களும் விமான மூலம் தாய்லாந்திலிருந்து பெய்சிங்கிற்கு கொண்டுவரப்பட்டன என்று அவர் கூறினார் இந்த உணவகத்தின் எல்லா இடங்களிலும் திரு ருவெய்மிங்கின் வடிவமைப்பு அழகு வெளிப்படுகிறது. உதாரணமாக இவ்வுணவகத்தில் விளக்கு ஒளி மென்மையானது. உணவு மேசைகள் அழகாகக் காணப்படுகின்றன. உணவகத்தின் நடுப்பகுதியில் 10க்கும் அதிகமானோர் அமரக் கூடிய கூடார மண்டபம் ஒன்று உள்ளது. தாய்லாந்தின் கூடார மண்டபத்தைப் போல இதை ருவெய்மிங் வடிவமைத்துள்ளார். ருவெய்மிங் மேலும் கூறுகிறார், உணவகத்தில் இயற்கைச் சூழலை உருவாக்க விரும்பினேன். உணவக மண்டபத்தின் நடுவில், கூடாரம் ஒன்று உள்ளது. இத்தகைய கூடாரத்தை தாய்லாந்தின் கிராமங்களில் காணலாம். கூர்மையான முகடு அதன் தனிச்சிறப்பு ஆகும். தாய்லாந்து, தொன்மை வாய்ந்த நாடு என்பதை வெளிப்படுத்த நான் இவ்வாறு அலங்காரம் செய்திருக்கின்றேன் என்றார் அவர். அவருடைய இக்கருத்து, அவருடைய மனைவி NORAH, தாய்லாந்து நாட்டவர் என்பதும் இந்த வடிவமைப்புக்கு ஒரு காரணம். தாய்லாந்து கிராமத்தில் பிறந்து வளர்ந்த NORAHவுக்குப் பெய்ச்சிங்கில் தம் வீட்டில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்த திரு ருவெய்மிங் இவ்வாறு வடிவமைத்துள்ளார் என்று ஊகிக்கலாம்.
1 2 3
|