இவ்வுணவகத்தில் மொத்தம் 5 சிறப்பு அறைகள் உள்ளன. இவற்றில் ஒன்று, சாதாரண தாய்லாந்து மக்களின் வீடு போல அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இவ்வறையின் வடிவமைப்பைத் தாம் மிகவும் விரும்புவதாகவும், ஒவ்வொரு முறை இங்கு வரும் போது, தாய்லாந்திலுள்ள தமது வீட்டுக்குத் திரும்புவது போல் உள்ளது என்றும் தாய்லாந்து மக்களின் வீட்டுச் சூழ்நிலை நிரம்பிய இவ்வறையில் செய்தியாளரிடம் NORAH அம்மையார் மகிழ்ச்சியுடன் கூறினார். அவர் மேலும் கூறியதாவது, இவ்வறையில் நுழையும் போது, சொந்த வீட்டுக்குள் நுழைவது போன்று உள்ளது. இங்கு துணிகள் அலமாரி, படுக்கை, உணவு மேசைஆகியவை உள்ளன. இவ்விடத்தை நான் மிகவும் விரும்புகின்றேன் என்றார் அவர். அடுத்து, சுற்றுலா பற்றிய தகவலை வழங்குகின்றோம். மியௌ இனக் குடும்ப உணவகம் மியௌ இனக் குடும்ப உணவகத்தில் சராசரி ஒருவர் 50 ழன்மின்பி யுவான் செலவழித்தால் நல்ல உணவு கிடைக்கும். நாற்காலி நடனம் அரங்கேற்றப்படும் நேரம் நாள்தோறும் ஏழரை மணிக்குத் துவங்கும். இந்நடனத்தில் பங்குகொள்ளும் விருந்தினருக்கு மியௌ இனப் பூ தையல் பை பரிசாக வழங்கப்படும். பௌசின் தைய் இன உணவகத்தின் பணி நேரம் மத்தியானம் 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை. மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை. இவ்வுணவகத்தில் சமைக்கப்பட்ட கறிவகை சுவையானது. விலை அதிகமில்லை. சராசரியாக ஒருவருக்கு 20 ழன்மின்பி யுவான் முதல் 30 ழன்மின்பி யுவான் வரை.
1 2 3
|