• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-09-01 09:38:32    
பெய்ச்சிங்கில் தாய்லாந்து உணவகம்

cri

தாய்லாந்து உணவகம் பற்றி தொடர்ந்து கூறுகின்றோம். தைய்லாச்சியோ என்னும் தாய்லாந்து உணவகம் பெய்ச்சிங் மாநகரின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. தைய்லாச்சியோ உணவகம், NORAH அம்மையாருக்குத் தாய்லாந்து திரும்பும் உணர்வை ஏற்படுத்தியது மட்டுமல்ல, அனைத்து விருந்தினர்களுக்கும் தாய்லாந்து கறிகளும் வழங்கப்படுகிறது. இங்குள்ள கறிகளைச் சமைப்பதற்கு தேவையான பொருட்களில் பெரும்பாலானவை, தாய்லாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. அத்துடன் தாய்லாந்து சமையல்காரர்களே இவ்வற்றைச் சமைக்கின்றனர். இதனால், அனைத்து கறிகளும் தூய்மையான தாய்லாந்து கறி சுவையைக் கொண்டுள்ளன என்று இவ்வுணவகத்தின் மேலாளர் லியூ சின்யெ அம்மையார் கூறினார். அவர் மேலும் கூறியதாவது,
கறிகளின் மூலப் பொருட்கள் எல்லாம் தாய்லாந்திலிருந்து வந்துள்ளன. இம்மூலப்பொருட்கள் அனைத்தும் தாய்லாந்து சமையற்காரர்களால் பதனிடப்பட்டவை. உண்மையான தாய்லாந்து கறி சுவை தான் என்றார் அவர்.


இவ்வுணவகத்தின் கறிப்பட்டியலில், புளிப்பான காரம் உள்ள பப்பாளிப்பழ salad, நறு மணம் வீசும் curry, தொன்மை வாய்ந்த பொரியல் சுட்ட இறைச்சி வகை, சுவையான இனிப்பு வகை, தாய்லாந்து உணவு வகை முதலியவை உள்ளன. தாய்லாந்து கறி நறு மணம் வீசுவதற்குத் தென்கிழக்காசியாவில் விளையும் நறு மணம் வீசும், மருந்து மூலிகைகள் காரணமாகும். தாய்லாந்து எலுமிச்சையினால் கறி புளிப்பாக உள்ளது. தாய்லாந்திற்கே தனிச்சிறப்புடைய சிறிய மிளகாயினால் கறி காரமாக உள்ளது. இம்மிளகாய், சீனாவின் சிறிய மிளகாய் போன்றது. மிகவும் காரம். இந்தத் தனிச்சிறப்பு வாய்ந்த இயற்கை மூலப்பொருட்களின் காரணமாக, தாய்லாந்து கறியின் இயல்பு முழுமையாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
1  2  3