
தாய்லாந்து உணவகத்தில் உண்மையான தாய்லாந்து உணவை உண்ணுவது மட்டுமல்ல, தாய்லாந்து ஆடல்-பாடல்களையும் கண்டுகளிக்கலாம்.
ஆடல்-பாடல்களில் தேர்ச்சி பெற்ற இந்த இளம் பெண்களும் இளைஞர்களும் நோரா அம்மையாரின் அழைப்பின் பேரில் தாய்லாந்திலிருந்து பெய்ச்சிங் வந்துசேர்ந்தனர். பெய்ச்சிங்கில் நீண்ட காலமாக வாழ்ந்த போதிலும், பிறந்தகம் என்றுமே நோராவின் மனதில் ஆழப்பதிந்துள்ளது. மறக்க முடியாது. தாய்லாந்து உணவகத்தை, பெய்ச்சிங்கிலுள்ள தமது மற்றொரு வீடென தாம் கருதுவதாக நோரா அம்மையார் கூறினார். சீன வானொலி ஒலிபரப்பு மூலம், மேலும் அதிகமான தாய்லாந்து விருந்தினர்கள் பெய்ச்சிங்கிலுள்ள தமது இவ்வீட்டுக்கு வருகை தருமாறு கேட்டுக்கொள்கிறார். தாய்லாந்து நண்பர்கள் இந்நிகழ்ச்சியைக் கேட்ட பின், வாய்ப்பு கிடைக்கும் போது சுற்றுலா மேற்கொள்ளவோ, பணி புரியவோ பெய்ச்சிங் வந்து, நேரம் ஒதுக்கி, எங்களோடு உரையாடலாம். தாய்லாந்து கறிவகையைச் சுவைத்துப்பார்க்கலாம். தாய்லாந்து ஆடல்-பாடல்களைக் கண்டுகளிக்கலாம். இவ்விடத்தில் பெறும் உணர்வு, நீங்கள் தாய்லாந்தில் இருப்பது போன்றது என்றார் நோரா அம்மையார்.
 நேயர்களே, வாய்ப்பு இருந்தால் நீங்களும் நோரா அம்மையார் நடத்தும் தாய்லாந்து உணவகத்துக்கு வந்து தாய்லாந்து கறிகளைச் சுவைத்துப்பாருங்கள். தைய்லாச்சியோ உணவகத்தில் உணவு வகைகளின் விலை அதிகமில்லை. இரண்டு பேரின் உணவுச் செலவு 100 யுவானுக்குள் உள்ளது. ருஃபி மீன், அன்னாசிப்பழச் சோறு, தேங்காய்ச்சாறு இனிப்பு ஆகியவை இவ்வுணவகத்தின் தனிச்சிறப்பு வாய்ந்த உணவு. தாய்லாந்து இசை நடனம் அரங்கேற்றும் நேரம், நாள்தோறும் மத்தியானம் பன்னிரண்டரை மணி முதல் இரவு ஆறு மணி வரை. பெய்ச்சிங்கில் தைய்லாச்சியோ உணவகம் தவிர, இன்னும் பல தாய்லாந்து உணவகங்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக, ச்சதியெச்சியோ, ஜின்சியாங்யுவான், ஹஹுவாதைய்செய் ஆகிய உணவுகங்கள் பிரபலமானவை. 1 2 3
|