• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-09-01 09:38:32    
பெய்ச்சிங்கில் தாய்லாந்து உணவகம்

cri

இனி சுற்றுலா பற்றிய தகவலை வழங்குகின்றோம்.
மியௌ இனக் குடும்ப உணவகம்
மியௌ இனக் குடும்ப உணவகத்தில் சராசரி ஒருவர் 50 யுவான் ழன்மின்பி செலவழித்தால் நல்ல உணவு கிடைக்கும். நாற்காலி நடனம் அரங்கேற்றப்படும் நேரம் நாள்தோறும் ஏழரை மணிக்குத் துவங்கும். இந்நடனத்தில் பங்குகொள்ளும் விருந்தினருக்கு மியௌ இனப் பூ தையல் பை பரிசாக வழங்கப்படும். பௌசின் தைய் இன உணவகத்தின் பணி நேரம் மத்தியானம் 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை. மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை. இவ்வுணவகத்தில் சமைக்கப்பட்ட கறிவகை சுவையானது. விலை அதிகமில்லை. சராசரியாக ஒருவருக்கு 20 யுவான் ழன்மின்பி முதல் 30 யுவான் ழன்மின்பி வரை.
போ ஓவில் சுற்றுலா
போக்குவரத்து, போ ஓ நகரம், சீனாவின் ஹைனான் மாநிலத்தின் தலைநகரான ஹைகொவிலிருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. பேருந்தில் சென்றால் ஒரு மணி நேரம் போதும்.
இருப்பிடம, சிங்வுருங் விடுமுறை விடுதி, சியுங்காய் விடுமுறை விடுதி, சியுங்காய்வுஹைய் கடற்கரை வெந்நீருற்று விடுமுறை விடுதி, போ ஓ நீல நிறக் கடற்கரை விடுமுறை விடுதி ஆகியவை நல்ல இடங்களாகும்.
பொழுதுபோக்கு, கோல்பு, சியுசிச்சியாங் வெந்நீருற்று விடுதி, இரண்டு பேர் சைக்கிள் மூலம் போ ஓவில் சுற்றுலா(ஒரு மணிக்கு 30 யுவான்), தூண்டில் போட்டு மீன் பிடிப்பது, நீச்சல், தொன்மை வாய்ந்த மீன் பிடி படகில் ஆற்றில் சுற்றுலா,  மோட்டர் படகில் வன்சியென் ஆற்றில் சுற்றுலா.
சுதேசி உணவு வகைகள், சாச் வாத்து, வன்சியென் மீன், வெப்ப மண்டலப் பழ வகை.
காட்சித்தலம், மணல் திட்டு, யுயெசன் தீவு, சன்கொன் கற்சிலை, லுங்தைன் மலைத்தொடர், சிங்நியு மலைத் தொடர், துங்யு தீவு, வன்சியென் ஆறு.

1  2  3