• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-08-04 09:26:48    
துங்ஹுவாங் பயணம்

cri

பத்து ஆண்டுகளுக்கு முன், kitaro என்கிற ஜப்பானியர், சீனாவின் பண்டைய பட்டுப்பாதை மீது மிகுதியும் பிரியம் கொண்டு, மேற்கு சீனாவின் பட்டுப் பாதை நகரான துங்ஹுவாங்க்குச் சிறப்பு வருகை தந்தார். விரிவான பாலைவனத்தில் மிதந்துவரும் புகை, கற்குரை கோபுர நிழல் ஆகியவை அவரது கண்களில் தென்படுகையில், ஒட்டகத்தின் கழுத்தில் உள்ள மணி ஓசை கேட்ட வண்ணம், கற்பனை ஊற்றெடுக்க, பட்டுப்பாதை எனும் இசைப்பாடலை அவர் இயற்றினார். கற்பனை ஆற்றல் மிகுந்தவராயினும் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்திய துங்ஹுவாங்கின் மலர்ச்சியை அவரால் ஊகித்துப்பார்க்க முடியவில்லை. பண்டைக்கால மொழியில் துங்ஹுவாங் என்றால், மாபெரும் ஒளி எனப்பொருள்படும். வரலாற்றில், பட்டுப்பாதை திறந்துவிடப்பட்டதினால், அது, ஒருகாலத்தில் புகழ்பெற்று விளங்கியது.

கி.பி. 366ஆம் ஆண்டில் லொசென் எனும் புத்த துறவி தங்ஹான் நகரிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவிலுள்ள சான்வெய் மலையில் ஏறினார். மாலையில் மறையும் சூரியனின் தங்க ஒளிவீச்சில் இம்மலை ஆயிரம் புத்தர்கள் குதித்தாடுவது போன்று, காட்சி தருகின்றது. இந்த எழிலான காட்சியில் மூழ்கி, தாம் நாடி வந்த புத்தமத உலகமே இது என்று அவர் நினைத்தார். சிறிது காலத்திற்குப் பின், முதலாவது கற்குகை, சீனாவின் மேற்குப் பகுதியில் கட்டப்படத் துவங்கியது. முகௌகு என்னும் இக்கற்குகையில் பின்னர் மொத்தம் ஆயிரத்துக்கும் அதிகமான குகைகள், திறக்கப்பட்டுள்ளன. இயற்கை மற்றும் செயற்கை சீர்குலை சில நூறு குகைகள் பாழ்பட்டன. இதுவரை, 492 குகைகள் மட்டும் பாதுகாக்கப்பட்டுள்ளன. 2400க்கும் மேலான வண்ண புத்தர் சிலைகள், அமர்த்தப்பட்டுள்ளன.

1  2  3