
45 ஆயிரம் சதுரமீட்டர் பரப்பளவில், சுவர் ஓவியங்கள் பேணிக்காக்கப்படுகின்றன. இதுவரை, உலகளாவிய நிலையில், அளவில் மிகப்பெரிய, மிகவும் முழுமையாகப் பேணப்பட்டுள்ள புத்த மத கலைக்கருவூலமாக, இக்குகை திகழ்கின்றது. 1992ஆம் ஆண்டில், யுனேஸ்கோ, உலக பண்பாட்டு மரபுச் செல்வமாக இதனை அறிவித்துள்ளது. இக்குகையின் கட்டுமானமும் இதில் புத்தர் சிலைகளை அமர்த்தும் நடவடிக்கையும் ஆயிரம் ஆண்டு வரை, நீடித்திருத்தது, அறியத் தக்கது. வேறுபட்ட கால கட்டத்திலுள்ளபுத்த மதத்தினரின் வண்ண சிலைகள், பெருமளவு பரப்பளவில் புத்த மதத்தைக் கருப்பொருளாகக் கொண்ட வண்ணச் சுவர் ஓவியங்கள் ஆகியவற்றினால், இக்குகை உலக புகழ்பெற்றுள்ளது. கற்குகையில், அறிதுயில் கொள்வது போல் அமைந்துள்ள புத்தர் சிலை, மிகவும் கவர்ச்சிகரமானது. அருமையான உடல் அமைப்பு, உயர்ந்த மூக்கு, ஒடுக்கமான நீளமான கண்கள் அரைகுறையாக திறந்த வண்ணம் இருக்கின்றன. இது, மிகவும் உயிர்த்துடிப்புடன் காணப்படுகின்றது. அதன் அன்பும் மன நிம்மதியும் மக்களை வெகுவாகக் கவர்கின்றன.இக்குகையிலுள்ள சுவர் ஓவியங்கள், அப்போதைய ஓவிய கலையின் சிகரத்தை மேலும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.

அவை அனைத்தும் உலகில் ஈடு இணையற்ற கருவூலமாகும். சீனாவின் பல்வேறு கால கட்டங்களில் வேறுபட்ட தேசிய இன மக்கள், துறையினரின் உழைப்பையும் சமூக செயலையும் இசை-ஆடல், ஆடை, அலங்காரம், தேசிய இனப் பழக்கம் முதலியவற்றையும் இவ்வோவியங்கள் உயிர்த்துடிப்புடின் எடுத்துக்காட்டுகின்றன. அவற்றில் பறக்கும் தேவிகள் எனும் சுவர் ஓவியம், மிகவும் பிரபலமானது. புத்தர், புத்த மதம் பற்றி சொல்லிக் கொடுக்கும் போது, தேவிகள் வானில் விரும்பியவாறு பறந்து செல்கின்றனர். அவர்களின் உடலிருந்து நறு மணம் வீசுகின்றது. எனவே, அவர்கள் மணம் கமழும் தேவி என்று அழைக்கப்படுகின்றனர். துங்ஹுவாங் பற்றி குறிப்பிடுகையில், திருமறை பொருட்கள் சேமிக்கும் குகை பற்றி, குறிப்பிடாமல் இருக்க முடியாது. 1900ஆம் ஆண்டு மே 26ஆம் நாள் அதிகாலை வாங் என்னும் பெயர் கொண்ட தாவோ மத துறவி, குகையில் சுத்தம் செய்த போது, இக்குகையைக் கண்டுபிடித்தார்.
1 2 3
|