• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-08-04 09:26:48    
துங்ஹுவாங் பயணம்

cri

இது, உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. சுமார் 1.6 மீட்டர் உயரமும் 2.7 மீட்டர் அகலமும் உடைய இச்சிறிய கற்குகையில் 900 ஆண்டுகளுக்கு முன்னர் அங்கிருந்த புத்த துறவிகள், முகௌ கோயிலின் திருமறை நூல்கள், சித்திரதையல் பொருள்கள், அன்றாட ஆவணங்கள் பதிவேடுகள் மற்றும் பல்வகை நூல்கள் எல்லாவற்றையும் சேமித்து வைத்து, குகையின் நுழைவாயிலை மூடிச்சென்றனர். அப்போது, திருமறை நூல்களின் எண்ணிக்கை மட்டும் 50 ஆயிரத்துக்கும் அதிகமாகும். இப்போது, சீனாவில் எண்ணாயிரம் நூல்கள் மட்டும் காப்பாற்றப்பட்டுள்ளன. ஏனைய 42 ஆயிரம் நூல்கள் காணாமல் போயின. அல்லது உலகின் இதர நாடுகளுக்குக் கொள்ளையடிக்கப்பட்டன. முக்கியமாக, பிரிட்டன், பிரான்சு, ஜப்பான், ரஷியா ஆகிய நான்கு நாடுகளில் இருப்பதாகக் கூறப்படுகின்றது. வானிலை, புவியியல், இசை, நடனம், மருத்துவம், அரசியல் மற்றும் தேசிய இன உறவு, ராணுவ ஆணை ஆகியவையும் பேரரசர் பிறப்பித்த கட்டளையும் வீட்டு மற்றும் நில உடைமை பத்திரம் மற்றும் வாங்கல்-விற்பனை உடன்படிக்கையும் பான விடுதியின் கணக்குப் பத்திரமும் 6 வகை மொழிகளில் இந்நூல்களில் பொறிக்கப்பட்டுள்ளன. இது மட்டுமின்றி, உலகில் மிகத் துவக்க காலத்திலிருந்த அச்சு பொருள் வடிவிலான தாங் வமிசத்தின் புத்தரின் மாவீர ஏவலர் பற்றிய திருமறையும் இதில் அடங்கும். எனவே, இத்திருமறையின் வரலாற்று முக்கியத்துவம் மதிப்பிடற்கரியது. நவ சீனா நிறுவப்பட்ட பின், துங்ஹுவாங் ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. துங்ஹுவாங்கிலுள்ள முகௌகு கற்குகை முழுமையாகப் பாதுகாக்கப்பட்டுள்ளது.

 


1  2  3