 Yue Liang Wan என்பது, ஒரு குடும்ப ஹோட்டலின் பெயராகும். அதன் உரிமையாளர்கள், ஒரு ஜோடி இளம் தம்பதிகள். கணவன், சுவாங் இனத்தைச் சேர்ந்தவர். அவரது பெயர் Liao Zhi Cheng. மனைவியின் பெயர் Pan Zukui. வெளியூரிலுள்ள யௌ இனத்தவர். ஒருவருடன் ஒருவர் நெருங்கி பழகி, திருமணம் செய்து, இச்சிறிய ரோட்டலை நடத்துவது பற்றி மன முழுகும் கதை இருக்கின்றது. இதிலிருந்து அவர்கிலன் காதலை மட்டுமின்றி, இந்த கிராமப்புற தம்பதிகள் ஹோட்டல் நடத்துவதில் சந்தித்துள்ள இன்னல்களையும் உணர்ந்து கொள்ளலாம்.
தெற்கு சீனாவின் குவாங் சி சுவாங் இன தன்னாட்சிப் பிரதேசத்தில் Long Ji எனுமிடத்தின் இயற்கை காட்சி மண்டலத்தில் இந்த சிறிய ஹோட்டல் அமைந்துள்ளது. நாள்தோறும் மனைவி Pan Zukui அதிகாலையிலேயே எழுந்திருந்து, விருந்தினர்களுக்கு காலை சாப்பாடு தயாரிக்கின்றார். விருந்தினர்கள் குடும்பத்தினர்களுக்கான காலை சாப்பாடுகளைத் தயாரித்து முடித்த பின்னர் தான், அவள் கொஞ்சம் ஓய்வு எடுக்க முடியும். மத்தியானத்துக்குப் பின், விருந்தினர்கள் வருவர். இந்த ஓய்வு நேரத்தில் ஹோட்டல் நடத்துவது பற்றி செய்தியாளரிடம் அவர் தெரிவித்தார்.

விறுவிறுப்பான சுற்றுலா பருவத்தில் எல்லாம், அவர் இவ்வாறு பரபரப்பாக செயல்படுகின்றார். கடினமான உழைப்பு, களைப்பு என்ற போதிலும், அதிக விருந்தினர்கள் வருகை தருவதால், மகிழ்ச்சி அடைகின்றார். இதற்கிடையில், ஹோட்டலின் அலுவல் சூடாகி விடுகின்றது. இவ்வாறு வருமானம் அதிகமாக கிடைக்கின்றது. இக்குடும்பத்தினஅ வாழ்க்கை, இவ்வருமானத்தைச் சார்ந்திருக்கின்றது.
அசல்உதாரணமாக இக்குடும்ப ஹோட்டல் திகழ்கின்றது. ஒரு முற்றம் போல அமைந்துள்ள இந்த ஹோட்டலில், மரபுவழி பணியிலான மரப்பலகை அறைகள் காணப்படுகின்றன. கீழ் மேல் என இரண்டு மாடிகளுடைய இந்த ஹோட்டலில் அலங்காரங்கள் மிகவும் எளிமையானவை. கீழ் மாடியில் உணவு விடுதி. மேல் மாடியில் 6 விருந்தினர் அறைகள். ஒவ்வொரு அறியிலும் இரண்டு படுக்கைகள் கிடக்கின்றன. போர்வைகள் சுத்தமானவை. சன்னல் மூலம், பச்சைப் பசேல் என்ற காட்சிகளைக் காணலாம். ஆகாயத்தில் மேகமும் மூடுபனியுமந் மதிந்து கொண்டே, மக்களை மகிழ்விக்கின்றது.
இந்த ஹோட்டலின் நான்கு பக்கங்களிலும் மலைத் தொடர்கள் சூழந்துள்ளன. மலைச்சரிவில் படிக்கட்டு வயல்கள் கோபுரம் போல் உயர்ந்து வருகின்றன. மலைகிடையே மேல மூடுபனியில் அவை மறைந்து கிடக்கின்றன. 700 ஆண்டுகளுக்கு முன்பே இப்படிக்கட்டு வயல்கள் சாகுபடி துவங்கிவிட்டது. பத்து ஆண்டுகளுக்கு முன்னர், இக்கம்பீரமான படிமுறை வயல்களினால் உருவான காட்சி, வெளிப்புறத்தில் பரவி, இதைப் பார்க்க ஆண்டுதோறும் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து பெரும் எண்ணிக்கையிலான பயணிகள் இங்கு வரைகை வருவர், முன்பு அமைதியான சுவாங் இன கிராமம், விறுவிறுப்பாக காட்சி அளிக்கின்றது.
1 2 3
|