• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-08-05 17:38:22    
சுவாங் இன கிராமத்தில் சிறிய ஹோட்டல்

cri

பாட்டு விழாவில் மங்கையர்கள்

30 வயதுக்குக் குறைவான Pan Zukuiக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. வயது அவ்வளவு என்ற போதிலும், ஹோட்டல் நடத்துவதில் 7 ஆண்டுகால அனுபவம் பெற்றுள்ளார். அவரது ஊர், பெரிய மலையின் மற்றொரு பக்கத்தில் உள்ள யௌ இன கிராமத்தில் உள்ளது. அங்கு மலைச்சரிவில் படிக்கட்டு வயல்கள் நிற்கின்றன. பயணிகள் அவ்வப்போது வருகை தருவர். திருமணமாவதற்கு முன், அவர் சிறிய ஹோட்டல் ஒன்றை நடத்தினார். அதன் அலுவல் பரவாயில்லை.

சுவாங் இன சிறுமிகள்

யௌ இன பெண்மனி ஒருத்தி, சுவாங் இனத்தின் மணமகளாவதற்குக் காரணம் என்ன? இதுவரை தம்பதி மிகவும் பேணிமதிக்கும் ஒரு காதல் தலையே இதற்குக் காரணமாகும். கணவரை சந்தித்து நெருங்கி பழகியது பற்றி குறிப்பட்ட போது. இன்பமும் அன்மும் கலந்த சிரிப்பு அவரது முகத்தில் காணப்படுகின்றது. அவர் கூறியதாவது

நாங்கள் இருவரும் ஒரே சந்திப்பில் காதலர்களானோம். நான் கிராமத்திலிருந்து பெட்டி சமான்களை முதுகுகளில் சுமர்ந்து கொண்டே இங்கு நடந்து கொண்டிருக்கையில் அவரை சந்தித்தேன். விரைவில் காதலித்தோம் என்றார்.

பொது நோக்கம் காரணமாக, இரண்டு வேறுபட்ட இனங்களைச் சேர்ந்த இளைஞர்கள் தம்பதியாகினர். காதல் நாட்களில், இரண்டு கிராமங்களின் நாடுவில் உள்ள மலைப்பாதையில் சந்தித்து, படிக்கட்டு வயல்களினால் உருவான எழிலான இயற்கை காட்சிக்கு முன்னால், வரும் வாழ்க்கை மீது எதிர்பார்ப்பு கொண்டுள்ளர். கிராமத்தில் மேன்மேலும் விறுவிறுப்பாகி வரும் சுற்றுலாத் துறை காரணமாக, திருமணம் செய்த பின், ஒரு சிறிய ஹோட்டல் நடத்த வேண்டும் என அவர்கள் திட்டமிட்டார்கள்.

இப்போது, தம்பதியினஅ லட்சியம் நனவாகிவிட்டது. இருப்பினும் ஹோட்டலை நடத்துவதில் சில இன்னல்கள் ஏற்பட்டுள்ளன. கிராமத்தில் குடும்ப முறையிலான ஹோட்டலை நடத்துவதில் பலர் ஈடுபட்டுள்ளனர். கிராமத்துக்கு வெளியே உள்ளவர்களும் இங்கும் முதலீடு செய்யத் துவங்கினர். முழுமையான வசதிகளுடன் கூடிய விருந்தினர் விடுதியும் கட்டப்பட்டுள்ளது. அவர்களஇன் இத்தகைய சிறிய ஹோட்டல் அதனுடன் போட்டியிடுவதில் பெரிய நெருக்கடி ஏற்பட்டிருக்கின்றது.

1  2  3