• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-08-23 11:21:36    
தமிழ் ஒலிபரப்பின் 42 ஆண்டுகள் வளர்ச்சி-ஒரு மறு ஆய்வு

cri

2005 ஆகஸ்ட் திங்கள் முதலாம் நாள் சீன வானொலி தமிழ் ஒலிபரப்பு துவங்கியதன் 42வது ஆண்டு நிறைவு நாளாகும். இதற்கான சிறப்பு நிகழ்ச்சிகள் ஜுலை திங்கள் 30ம் நாள் முதல் ஆகஸ்ட் திங்கள் முதலாம் நாள் வரை தொடர்ச்சியாக ஒலிபரப்பாயின. இவ்வற்றில் விழுப்புரம் மாவட்ட அனைத்திந்திய சீன வானொலி நேயர் மன்றமும், திருச்சி மாவட்ட அனைத்திந்திய சீன வானொலி நேயர் மன்றமும், பெய்சிங்கில் பன்னாட்டுத் தமிழர் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற கொண்டாட்ட நடவடிக்கையும் சிறப்பு நிகழ்ச்சிகளாக ஒலிபரப்பப்பட்டன. இதற்கிடையில் அனைத்திந்திய சீன வானொலி நேயர் மன்றத் தலைவர் வளவனூர் புதுபாளையம் எஸ் செல்வம், அனைத்திந்திய சீன வானொலி நேயர் மன்றத்தின் தலைமை செயலாளர் பெருந்துறை பல்லவி பரமசிவன், பகளாயூர் பி.ஏ.நாச்சிமுத்து, சேந்தமங்கலம் தமிழ் தென்றல் நேயர் மன்றம், நேயர்களான விழுப்புரம் எஸ் பாண்டியராசன், அருண், பிரபாகரன் முதலியோர் பாஃக்ஸ் அல்லது தொலை பேசி மூலம் தமிழ் பிரிவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

சீனத் தமிழ் ஒலிபரப்பு வளர்ச்சி வரலாறு 42 ஆண்டுகளைக் கடந்து விட்டது. ஒரு தலைமுறையின அயராத உழைப்பினால் உருவெடுத்த சீனத் தமிழ் ஒலிபரப்பு இப்போது விறுவிறுப்பாக வளர்ச்சியடைந்து வருகின்றது. இன்றைய நிலைமையை பார்க்கும் போது சீன வானொலியில் தமிழ் ஒலிபரப்பை தொடக்கிவைத்த மூத்த ஒலிபரப்பாளர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறியுள்ளதா?என்ற கேள்வி எழுகிறது. 42வது ஆண்டு நிறைவு நாள் முந்தைய ஆண்டு நிறைவுகளை விட வித்தியாசமாக அமைந்ததற்குக் காரணம் உண்டு. இவ்வாண்டில் சீன வானொலி தமிழ் பிரிவில் புதிய நிபுணராக சேர்ந்துள்ள ராஜாராம் தமது சுறுசுறுப்பான நடவடிக்கைகள் மூலம் பெய்சிங்கில் உள்ள இந்தியன் கிச்சன் எனும் உணவகத்தில் முன்பை விட சிறப்பான கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்தார். அதில் கலந்து கொள்ள வந்திருந்த சீனத் தமிழர்களிடையே குடும்ப உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்தது போன்ற ஒரு அன்பு உணர்வு ஏற்பட்டது.

1  2  3