• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-08-23 11:21:36    
தமிழ் ஒலிபரப்பின் 42 ஆண்டுகள் வளர்ச்சி-ஒரு மறு ஆய்வு

cri

பின் முக்கிய விருந்தினர்களான சீனாவுக்கான இந்திய தூதரக ராணுவ அதிகாரி கர்னல் நரசிம்மன், முதல் செயலாளர் ஸ்ரீதரன், இலங்கை பேராசிரியர் சந்திரசேகரன், தமிழ் பிரிவின் மூத்த ஒலிபரப்பாளர்களுக்கு தமிழ் கற்பித்த ஆசிரியர் சாரதா அம்மையாரின் மகன் அபிலாஷ், கார் நிறுவனத்தின் சீன இந்தியா மற்றும் சிங்கப்பூர் பிரிவு கணக்கு தணிக்கையாளர் ரகுபதி, மலேசியத் தமிழர் விரோனிகா அம்மையார் முதலியோர் கொண்டாட்ட விழாவில் சீன வாளொலியை வாழ்த்திப் பேசினார்கள். அடுத்து தமிழ் பிரிவின் இயக்குனர் தி கலையரசி தமிழ் பணியாளர்களின் சார்பில் கடந்த சில ஆண்டுகளில் வளர்ச்சியடைந்த தமிழ் பிரிவின் நிலைமை, நிகழ்ச்சி கட்டமைப்பு, இணையத்தின் வளர்ச்சி ஆகியவை பற்றி விருந்தினர்களுக்கு எடுத்து கூறினார். அத்துடன் வருகை தந்த விருந்தினர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். விழாவில் முதலாவது செயலாளர் ஸ்ரீதரன் சீனாவுக்கும் இந்தியாவுக்குமிடையிலான நட்பு சீன மொழிக்கும் தமிழ் மொழிக்குமிடையிலான ஒற்றுமை ஆகியவை பற்றி உரைநிகழ்த்தினார். கார் குழுமத்தின் கணக்கு தணிக்கையாளர் ரகுபதி பலகுரல் நகைச்சுவை நிகழ்ச்சி நடத்தினார். அனைவரும் அவருடைய தலைசிறந்த அரங்கேற்ற நுட்பத்தையும் கதையையும் கேட்டு மிக மகிழ்ச்சியடைந்தனர். மாணி அனைவருக்கும் நன்றி கூறினார். இந்தியன் கிச்சன் உணவகத்தில் உளமார்ந்த மகிழ்ச்சியும் அன்பும் நிறைந்த சூழ்நிலையில் கொண்டாட்ட விழா இனிதே நிறைவடைந்தது.

இதற்கு பின் உணவகத்தின் மேஸாஷக் சதீஷ் விருந்தினர்களுக்கு சுவையான விருந்து ஏற்பாடு செய்தார். அருமையான சுவையான இந்திய உணவு உட்கொள்ளும் போது நண்பர்கள் பரிமாறிக் கொள்ளும் வாய்ப்பு மீன்டும் கிடைத்தது. வணக்கம் என்ற எளிதான சொல்லில் துவங்கி நட்பு உணர்வு ஆழமாகி தொடர்ந்து தொடர்பு கொள்ளுங்கள் என்ற சொல் அன்றைய விருந்தில் அடிக்கடி ஒலித்தது. சீன மொழி நன்றாக பேசுகின்ற ராணுவ அதிகாரி நரசிம்மன் சீனாவுக்கும் இந்தியாவுக்குமிடையிலான நட்புறவின் வளர்ச்சிக்காக முயற்சி செய்யும் விருப்பத்தை மீண்டும் தெரிவித்தார். பதவியிலிருந்து தாயகத்துக்கு திரும்பும் நாள் நெருங்கி வருகின்றது. ஆனால் இருநாட்டு நட்புக்கான முயற்சி எவ்வகையிலும் பாதிக்கப்பட வில்லை என்றார். ஆசிரியர் சாரதாவின் மகன் அபிலாஷ் சீனாவில் வளர்ந்தவர். அவர் சரளமாக சீன மொழியில் பேசினார். தமிழ் ஒலிபரப்பின் மீது அவர் ஆழந்த உணர்ச்சியையும் நன்றியையும் கொண்டுள்ளார். சிங்கப்பூரில் வாழ்கின்ற தாயார் தமிழ் ஒலிபரப்பின் விறுவிறுப்பான வளர்ச்சி செய்தியை கேட்டு மகிழ்ச்சியடைவார் என்று நம்பிக்கையுடன் கூறினார். கூடவே சிங்கப்பூரில் உள்ள தனது தாயாருடன் செல்லிட பேசியில் தொடர்பு கொண்டு அதன் மூலமாக கூட்ட நடவடிக்கைகளை சாராதா அம்மையார் கேட்கச் செய்தார்.

42 ஆண்டுகளுக்கு முன் இல்லாத நிலையில் தமிழ்ப் பிரிவின் பணியாளர்கள் தமிழ் ஒலிபரப்பை நடத்துகின்றனர். இப்போது முதியோர்கள் ஓய்வு பெற்ற போதிலும் தமிழ் ஒலிபரப்பு தொடர்ந்து பல தலைமுறை முயற்சியுடன் வளர்ந்து வருகின்றது. அரை மணி நேரம் நிகழ்ச்சி கட்டமைப்பிலிருந்து தமிழ் ஒலிபரப்பு ஒரு மணி நேரம் நிகழ்ச்சி கட்டமைப்பாக வளர்ந்துள்ளது. இது மட்டுமல்ல 2003ம் ஆண்டு டிசெம்பர் திங்கள் 28ம் நாள் அதன் இணைய தளம் செயல்படத் துவங்கியது. குறைவான பணியாளர்கள் அதிகமான வேலை செய்யும் போது அதன் கடினம் துறையின் வளர்ச்சி முன்னால் சிறிதாகிவிட்டது. ஒளிவீசும் எத்ரிகாலத்தை நோக்கி முன்னேறுவோம். செந்தமிழோசை உலகெங்கும் பரவுவது திண்ணம்.


1  2  3