2004 டிசெம்பர் திங்களில் தமிழ் பிரிவில் பணி புரிய துவங்கிய நிபுணர் ராஜாராம் இரண்டு மாதங்களுக்கு முன்பே தமிழ் பிரிவின் இயக்குனர் தி. கலையரசியுடன் தமிழ் ஒலிபரப்பின் 42வது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டம் பற்றி விவாதித்தார். பல முயற்சிகளுக்குப் பின்னர் பெய்சிங்கில் வாழும் தமிழர்கள் தங்களது குடும்பத்தினருடன் ஜுலை திங்கள் 31ம் நாள் இந்தியன் கிச்சன் உணவுவிடுதியில் நடந்த கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்களில் சீனாவில் உள்ள இந்திய தூதரகத்தின் ராணுவ அதிகாரி கர்னல் நரசிம்மன், முதலாவது செயலாளர் ஸ்ரீதரன் போன்ற அதிகாரிகள் மக்களுடன் சேர்ந்து கொண்டாட்டத்தில் பங்கேற்றனர்.
மதியம் பதினொன்றரை மணி வாக்கில் விருந்தினர்கள் ஒருவர்பின் ஒருவராக உணவகத்துக்குள் நுழைந்தனர். பழைய நண்பர்கள் மற்றும் புதிய நண்பர்கள் எல்லோரின் முகங்களிலும் மகிழ்ச்சி காணப்பட்டது. உற்சாகத்துடன் வணக்கம் சொல்லி உரையாடினர். புதிய நண்பர்கள் ஒருவருக்கு ஒருவர் அறிமுகப்படுத்திக் கொண்டு விரைவாக பழகத் தொடங்கினர். கொண்டாட்டம் பன்னிரண்டரை மனிக்கு துவங்கியது. நிபுணர் ராஜாராம் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். முறைப்படி தமிழ் பிரிவின் ஒலிபரப்பாளர்கள் அனைவரையும் தனித்தனியாக விருந்தினர்களுக்கு ராஜாராம் அறிமுகப்படுத்தினார். அவர்களைப் பற்றி சுருக்கமாக எடுத்துக் கூறினார். ஒவ்வொருவருக்கும் மலர்ச் செண்டுகள் வழங்கப்பட்டன.
1 2 3
|