• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-08-26 08:51:37    
கர்கஸ் இன பேராசிரியர் மக்லேக

cri

பேராசிரியர் மக்லேக், மொழி ஆய்வில் அருஞ்செயல் ஆற்றியுள்ளார். கர்க்ஸ் இனம் பற்றிய பல படைப்புகளை அவர் மொழியாக்கினார். தம் ஊர் சொந்த தேசிய இனம் ஆகியவற்றின் மீது பேராசிரியர் ஆழந்த பற்றுக் கொண்டுள்ளார். அவரது பார்வையில், மொழி என்பது, மக்களுக்கிடையில் தகவல் பரிமாற்றத்துக்கான கருவியாகும். இது மட்டுமின்றி, மக்களின் செயல்-கருத்தின் மீதும் தாக்கம் ஏற்படுகின்றது. ஒரு தேசிய இனத்தின் மொழியை புரிந்து கொள்ளலாம் என்று அவர் கருதுகின்றார். அவர் கூறியதாவது,

குழந்தைகள், பேசப் பழகுவதுடன் இவ்வுலகை அறிந்து கொள்ளத் துவங்குவர். கர்கஸ் இனத்தவர்கள் பெரும்பாலானோர், மலைப்பிரதேசத்தில் வாழ்கின்றனர். குழந்தைகள் சிறு வயதிலிருந்தே சமூகத்துடன் தொடர்பு கொள்வது குறைவு. பெற்றோர்கள் அவர்களின் முதலாவது ஆசிரியர்களாவர். தாய்தந்தையின் வார்த்தைகள் குழந்தைகள் வாழ் நாள் முழுவதும் தாக்கம் செலுத்தும் என்றார்.

சர்வதேச கல்வியியல் ஆய்வுக் கருத்தரங்கில் கர்கஸ் இனம் பற்றி மக்லேக் நிகழ்த்திய உரை, இதில் கலந்து கொண்ட அறிஞர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பின்னர், கிர்க்கீஸ்தான் நாட்டுத் தலைவர் அவரை சந்தித்துப் பேசினார். அன்றி, இந்நாட்டின் தேசிய மொழி பண்பாட்டுக் கல்லூரி அவரை வாழ்நாள் கொளரவ பேராசிசியராக வரவழைத்தது.

மானாஸ் எனும் கர்கஸ் நீண்ட காவியத்தை அவர் ஆராய்கின்றார். இக்காவியம், மரபுக்கதை காவியமாகும். மானாஸ் குடும்பத்தினர்கள் எட்டு தலைமுறையினர்கள், பிற இனத்தின் ஆக்கிரமிப்பை எதிர்த்து, ஊரைப் பாதுகாத்து, கர்கஸ் இனத்துக்காக அமைதி வாழ்க்கையை நாட முயற்சிப்பதை இக்கதை வர்ணிக்கின்றது. இக்கதை, கலை மற்றும் பண்பாடு மதிப்புமிக்கது. பேராசிரியர் மக்லேக், இக்காவியம் பற்றிய பல ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டிருக்கின்றார். தவிரவும், பல மொழிகளிலும் இக்காவியத்தை வெளியிடுவதிலும் அவர் ஆர்வம் காட்டினார்.

மொழி ஆய்வுப் பணி மிகவும் கடினம். மிகுந்த கல்வியறிவு இதற்குத் தேவை. தேசிய இன மொழியின் பயன்பாடு, வரம்புக்குட்பட்டது. பயன்பாட்டுக்கான தரவுகளும் மிகக் குறைவு. இதனால், சேகரிப்பு சீர்செய்தல் என்ற பணி மேலும் கடினமாகியுள்ளது. சின்ச்சியாங்கில் வாழும் கர்கஸ் இனத்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 50 ஆயிரத்துக்குட்பட்டது. அன்றி அவர்களில் பெரும்பாலானோர், ஒதுக்குப்புறப் பிரதேசத்தில் வசிக்கின்றனர். சில வேளையில், ஒரு சொல்பொருளை அல்லது ஒரு கதையை புரிந்து கொள்வதற்கு, மக்லேக், மலைகளைக் கடந்து சென்ற பின்னரே தாம் சந்திக்க வேண்டியவரை தேடிக்கொள்ள முடியும். சிரமம் என்ற போதிலும், பேராசிரியர் மக்லேக் மிகவும் மகிழ்ச்சியடைவார்.

1  2  3