• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-08-26 08:51:37    
கர்கஸ் இன பேராசிரியர் மக்லேக

cri

மொழியைச் சீராக்கும் பணி, கடினமான, தொடர்ச்சியான வாய்ந்த பணியாகும். குறிப்பிட்ட ஒரு பிரச்சினையை ஆராயும் போது, விரிவான முறையில் தரவுகளைப் படித்துப் பார்க்க வேண்டும். பொதுவாக ஒரு நாளில் 5 மணிநேரம் தான் ஓய்வு எடுக்க முடிகின்றது. இருப்பினும், நான் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன். ஏனெனில், நான் ஈடுபடும் பணி, முக்கியத்துவம் வாய்ந்ததாக நினைக்கின்றேன். கர்கஸ் இன மக்கள், தமது வரலாற்றைத் தெளிவாகப் புரிந்து கொண்டு, நான் சீராக்கிய நூல்களைப் படிப்பதைக் கண்டு மிகவும் ஆனந்தம் அடைகின்றேன் என்றார்.

பேராசிரியர் மக்லேக், இப்போது, சின்ச்சியாங் கர்கஸ் இன பண்பாட்டு வரலாற்று ஆய்வகத்தின் தலைமை செயலாளர், சின்ச்சியாங் மொழியும் மொழிபெயர்ப்பும் என்ற இதழ் நிலையத்தின் தலைவரும், சீன மானாஸ் ஆய்வகத்தின் தலைமை செயலாளருமாவார். பல பதவிகளை மற்றும் குடும்பத்தினர்களின் மனதில் அவர் பணி வெறி பிடித்தவராகத் திகழ்கின்றார். அவரது மனைவி கு நி சாங் கூறியதாவது,

2003ம் ஆண்டு ஒரு நாள் பிற்பகலில் மக்லேக் நோய்வாய்பட்டதாக எனது சகா என்னிடம் தெரிவித்தார். இதைக் கேட்டதும் கதிகலங்கி மக்லேக் அலுவலகத்துக்குச் சென்றேன். கைகளில் நிறைய தாள்களை வைத்துக் கொண்டு நாற்காலியில் கிஞ்சித்தும் அசையாமல் படுத்திருப்பதைக் கண்டேன். மருத்துவ மனைக்கு அனுப்பப்பட்ட போது, அவருக்கு கடும் மூளை களைப்பு என்றும் நன்றாக ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் மருத்துவர் சொன்னார். இருப்பினும் மருத்துவமனையில் இருந்த அந்த நாட்களிலும் நூல் வெளியீடு பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தார்.

பேராசிரியர் மக்லோக் வீட்டில் எளிதான தட்டுமுட்டு சாமான்கள் காணப்படுகின்றன. 60 சதுரமீட்டர் பரப்புடைய இவ்வீட்டில் நூல்கள் பெரும் பகுதியை ஆக்கிரமிக்கின்றன. தந்தையின் பணச்சேமிப்பு, நூல்களை வாங்கவும் அறிவியல் ஆய்வுக்காகவும் செலவிடப்பட்டு விட்டதாக, அவரது மகன் எங்களுக்குத் தெரிவித்தார். முசாங்சியாங் எனும் பெயருடைய மக்லேக்கின் மகன் கூறியதாவது,

தந்தை, எண்ணற்ற படைப்புகளை இயற்றினார். நேர்மையாகச் செயல்பட வேண்டும் என்பது, என் மீது மிகுதியும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. பொதுவாக எத்தகைய மனிதராகச் செயல்பட வேண்டும் என்று அவர் சொல்லுவதில்லை. ஆனால், தந்தையின் செயல்-வார்த்தையைப் பார்க்கும் போது, எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என்று நானே புரிந்து கொள்ள முடிகின்றது. என்றார்.


1  2  3