23 ஆண்டுகளுக்கு முன் லி துங் ஷெங் எனும் இளைஞர் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பின், தமது ஊரான குவாங் துங் மாநிலத்தின் ஹுய் சோ நகருக்கு திரும்பி, வீட்டுக்கு பயன்படும் மின் கருவிகளை உற்பத்தி செய்யும் ஒரு சிறிய தொழில் நிறுவனத்தில் தொழில் நுட்ப பணியாளராக பணி புரிந்தார். தற்போது, சீனாவில் வீட்டுக்கு பயன்படும் மின் கருவிகளை உற்பத்தி செய்யும் முக்கிய தொழில் நிறுவனங்களின் தலைவர்களில் ஒருவராக அவர் மாறியுள்ளார். அவரின் தலைமையிலான TCL நிறுவனம், சர்வதேச மயமாக்கத்தின் மூலம், உலகில் மிகப் பெரிய வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகளை உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனமாக வளர்ந்துள்ளது.
இவ்வாண்டு 48 வயதான லி துங் ஷெங், TCL நிறுவனத்தில் தொழில் நுட்ப பணியாளர், திட்டப்பணிக்கு பொறுப்பாளர் மற்றும் துணை பொது மேலாளராக அடுத்தடுத்து பணி புரிந்திருக்கிறார். 1996ஆம் ஆண்டில், தமது சிறப்பான நிர்வாக மற்றும் தொழில் நுட்ப திறன் மூலம், அவர் TCL நிறுவனத்தின் ஆளுனர் ஆகி விட்டார். அப்போது, சீனாவின் வீட்டுக்கு பயன்படும் மின் கருவிகள் உற்பத்தி நிறுவனங்களின் வெளிநாட்டு வணிகம் தொடக்க கட்டத்திலே இருந்தது. அந்நிய தொழில் நிறுவனங்களுக்காக உற்பத்தி பொருட்களைத் தயாரித்து கொடுப்பதில் அவை முக்கியமாக ஈடுபட்டன. 1997ஆம் ஆண்டில் தென் கிழக்காசியாவில் நிகழ்ந்த நிதி நெருக்கடியால், TCL நிறுவனம் உள்ளிட்ட வீட்டுக்கு பயன்படும் மின் கருவிகளை உற்பத்தி செய்யும் சீன தொழில் நிறுவனங்களின் வெளிநாட்டு வணிகத்திற்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், வெளிநாட்டு வணிகத்தை மேலும் வளர்க்க, வெளிநாட்டு சந்தைகளில் சொந்த சின்னத்தை கொண்ட உற்பத்தி பொருட்களை பரப்ப வேண்டும் என்று லி துங் ஷெங் புரிந்து கொண்டார்.
1 2 3
|