"தென் கிழக்காசிய நிதி நெருக்கடியினால், பல ஆசிய நாடுகளின் பண மதிப்பு பெருமளவில் குறைக்கப்பட்டது. ஆனால், ரென்மின்பியின் மாற்று விகிதம் நிலையாக வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலைமையில் நாங்கள் பல ஆர்டர்கள் இழந்தோம். 1998, 1999 ஆண்டுகளில், எங்கள் நிறுவனத்தின் ஏற்றுமதி குறைந்தது. வெளிநாடுகளில் எங்கள் சின்னத்தை பரப்பா விட்டால், தொழில் நிறுவனத்தின் சீரான வளர்ச்சியை நிலைநாட்டுவது கடினம் என்று நான் உணர்ந்தேன்" என்றார் அவர்.
தென் கிழக்காசிய நிதி நெருக்கடிக்கு பின், TCL நிறுவனத்தின் சர்வதேச வளர்ச்சி என்ற நெடுநோக்கு திட்டத்தை லி துங் ஷெங் உருவாக்கினார். இதனிடையே, வேறுபட்ட வெளிநாட்டு சந்தைகளில் வேறுபட்ட வளர்ச்சி திட்டங்களையும் அவர் மேற்கொண்டார்.
5 ஆண்டுகளுக்கு முன், TCL நிறுவனம் முதலில் தென் கிழக்காசிய நாடுகளில் சொந்த சின்னத்தைக் கொண்ட உற்பத்தி பொருட்களை விற்பனை செய்தது. பெரும் நிர்ப்பந்தத்தின் கீழ் லி துங் ஷெங் இந்த முடிவு எடுத்தார். TCL நிறுவனத்தின் வியட்நாம் கிளையின் பொது மேலாளர் யி சுன் யூ செய்தியாளரிடம் கூறியதாவது—
"2000ஆம் ஆண்டின் தொடக்கத்தில், வியட்நாம் சந்தையிலிருந்து வெளியேற வேண்டும் என்பது, நிறுவனத்தில் முக்கிய கருத்தாக இருந்தது. இந்த சந்தையில் வாய்ப்புகள் அதிகம் என்று எங்களுக்குடைய சில முக்கிய பொறுப்பாளர் மட்டுமே கருதினர். மீண்டும் வளர்ச்சி அடைவதற்கு எவ்வளவு காலம் ஆகும் என்று ஆளுனர் லி என்னிடம் கேட்டார். 6 திங்கள் என்று நான் சென்னார். எனவே, வியட்நாம் கிளைக்கு 6 மாதங்களை வழங்குவதாக ஆளுனர் லி அறிவித்தார்" என்றார் அவர்.
லி துங் ஷெங் மன உறுதி மிக்கவர். வியட்நாம் சந்தையின் தனிச்சிறப்புக்கிணங்க TCL நிறுவனம் புதிய தொலைக்காட்சி பெட்டியை உருவாக்கியது. 3 ஆண்டுகளுக்குள் இலவச பழுது பார்ப்பும் பயன்பாட்டு நாள் முழுவதும் பழுது பார்ப்பும் என்ற சேவை வாக்குறுதியை அது முதலில் வியட்நாம் சந்தையில் முன்வைத்தது. இந்த நடவடிக்கைகளால், TCL தொலைக்காட்சி பெட்டிக்கு வியட்நாம் மக்களின் வரவேற்பு கிடைத்தது.
வியட்நாம் சந்தையில் வெற்றி பெற்ற பின், TCL சின்னம் தென் கிழக்காசியாவின் இதர நாடுகளில் வெற்றிகரமாக நுழைந்தது. பிறகு, ஐரோப்பிய மற்றும் அமெரிக்க சந்தையில் லி துங் ஷெங் பார்வையை செலுத்தினார். ஐரோப்பிய மற்றும் அமெரிக்க சந்தையில் நுழைந்த போது, உள்ளூரின் புகழ்பெற்ற சின்னத்தை இணைத்து சீரமைக்கும் தந்திரத்தை அவர் மேற்கொண்டார். 3 ஆண்டுகளுக்கு முன், TCL நிறுவனம் 80 லட்சம் யூரொ முதலீடு செய்து, ஜெர்மனியில் 100 ஆண்டு வரலாறு உடைய Schneider மின் கருவிகள் நிறுவனத்தை வாங்கி, ஐரோப்பிய சந்தையில் நுழைந்தது.
1 2 3
|