TCL நிறுவனம் சர்வதேச மயமாக்க பாதையில் நடை போடுவதில் லி துங் ஷெங் கொண்டுள்ள நம்பிக்கையை, இவ்விரு வெற்றிகள் வலுப்படுத்தின.
கடந்த ஆண்டின் ஆகஸ்டு திங்கள், TCL நிறுவனம் 13 கோடி அமெரிக்க டாலரை முதலீடு செய்து, பிரான்சில் புகழ்பெற்ற Thomson நிறுவனத்தை வாங்கி, TCL-Thomson மின் கருவிகள் நிறுவனத்தை உருவாக்கியது. இதுவரை, உலகெங்கும் 5 ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையங்கள், 10 உற்பத்தி தளங்கள் மற்றும் 20 ஆயிரத்துக்கு அதிகமான விற்பனை அமைப்புகளை TCL நிறுவனம் நிறுவியுள்ளது. கடந்த ஆண்டு, TCL நிறுவனம் உலகில் விற்பனை செய்த தொலைக்காட்சி பெட்டிகளின் எண்ணிக்கை ஒரு கோடியே 70 லட்சத்தைத் தாண்டியது. இது 2003ஆம் ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட சுமார் 50 விழுக்காடு அதிகமாகும்.
வெளிநாடுகளில் நிறுவனங்களை வாங்கிய போது, வெவ்வேறான நாடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கும் இடையே வேறுபட்ட உழைப்புப் பண்பையும் நிர்வாக முறையையும் ஒருங்கிணைப்பதற்கு TCL நிறுவனம் முக்கியத்துவம் அளித்தது என்று லி துங் ஷெங் கூறினார். அவரது இந்த கருத்துக்கு உடன்பாடு கிடைத்தது. TCL-Thomson மின் கருவிகள் நிறுவனத்தின் முதன்மை தொழில் நுட்ப அதிகாரி Jean-Claude Favreau கூறியதாவது—
"ஆளுனர் லியின் கருத்தை நான் வரவேற்கின்றேன். Thomson நிறுவனத்துக்கு சொந்த வழிமுறையும் ஒழுங்கு முறையும் உண்டு. TCL நிறுவனத்தின் வேலைப் பண்பாட்டில் தனது வழிமுறையும் ஒழுங்கு முறையும் அடங்குகிறது. பண்பாட்டு ஒருங்கிணைப்பு நடத்தினால், நாடுகளின் பண்பாட்டு ஒருங்கிணைப்பு மட்டுமல்ல, தொழில் நிறுவனங்களின் ஒருங்கிணைப்பும் நடத்தப்பட வேண்டும். ஒத்துழைப்பு நெடுநோக்கு திட்டம் வெற்றி பெறுவதற்கு இது முன் நிபந்தனையாகும்" என்றார் அவர்.
இவ்வாண்டு TCL நிறுவனம் 7000 கோடி யுவான் என்ற விற்பனை இலக்கை நிர்ணயித்துள்ளது. 2010ஆம் ஆண்டு வரை, இந்த தொகை 15 ஆயிரம் கோடி யுவானை எட்டும். அப்போது, சர்வதேச போட்டி போடும் திறன் உள்ள உலகளாவிய நிறுவனமாக TCL நிறுவனம் மாறிவிடும். 1 2 3
|