• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-09-07 08:22:57    
சீனாவுக்கு வந்த அமெரிக்க விமான படை

cri

கடந்த ஆக்ஸ்ட் திங்கள், சுமார் நூறு அமெரிக்க முதியோர்கள் மிகவும் தூரத்திலிருந்து சீனாவுக்கு வருகை தந்தனர். 60 ஆண்டுகளுக்கு முன் இளைஞர்களாக இருந்த போது அவர்கள் சீனாவுக்கு வந்திருந்தனர். அப்போது அவர்கள் ஒரு விமான படையைச் சேர்ந்த துணிச்சல் மிக்க விமானிகளாக, சீன மக்களுடன் சேர்ந்து ஜப்பானிய ஆக்கிரமிப்பு எதிர்ப்பு போரில் ஈடுபட்டனர். சிறகுடனான புலி அப்படையின் சின்னமாகும். ஆகையால், சீன மக்கள் இந்த படையை பறக்கும் புலிகள் என்று அழைத்தனர்.

60 ஆண்டுகளுக்கு முன் போரிட்ட இடங்களையும், போரில் உயிர் இழந்து சீனாவில் புதைக்கப்பட்ட சக படைவீரர்களின் கல்லறைகளையும் பார்க்க அவர்கள் மீண்டும் சீனாவுக்கு வந்தனர்.

80 வயதுடைய ஸ்லோட், பறக்கும் புலிகள் படையின் சரக்கு விமானத்தின் விமானியாவார். பெய்ஜிங்கில் அப்போது ஓட்டிய பழைய விமானங்களைக் கண்ட அவர், முந்தைய வாழ்க்கையை நினைவு கூர்ந்தார்.

அப்போது மோசமான வானிலையில் மிக உயரமான பனி மலைகளைக் கடந்து பறக்க வேண்டியிருந்தது. ஒரு இரவில் மொத்தம் 28 விமானங்கள் விபத்துக்குள்ளாயின. நாங்கள் எல்லோரும் குடும்பத்தினரை நினைத்தோம். இருந்தபோதிலும், எமது உதவி தேவைப்படும் மக்களையும் கவனித்தோம் என்றார் அவர்.

1941ஆம் ஆண்டு, சீன மக்களின் ஜப்பானிய ஆக்கிரமிப்பு எதிர்ப்பு போர் 4 ஆண்டுகளுக்கு நீடித்தது. துவக்கத்தில் தீவிரமான வான்போருக்குப் பின், விமான படையின் போரிடும் ஆற்றல் பெரிதும் குறைந்திருந்தது. ஆகையால், பலமிக்க ஜப்பானிய விமான படை சீனாவின் வான் எல்லையில் அத்துநீறில் பறந்து, அடிக்கடி குண்டுகளை வீசி, சீனாவுக்கு மாபெரும் இழப்பை ஏற்படுத்தியது.

1  2  3