சீன விமான படையின் போரிடும்ஆற்றலை உயர்த்தும் வகையில், சர்வதேச சமூகத்தின் ஆதரவை பெற சீன அரசு பாடுபட்டது. இந்த நிலைமையில் தான் அமெரிக்க விமான படை அதிகாரி Claire Lee Chennalult சீனவுக்கு வந்தார். தென்மேற்கு சீனாவின் முக்கிய நகரான குன் மின் நகரில் அவர் பயிற்சிப் பள்ளியை அமைத்து, சீனாவின் விமானிகளுக்கு பயிற்சி அளித்தார். சீனாவை மேலும் ஆதரிக்க, 1941ஆம் ஆண்டு துவக்கத்தில், அமெரிக்க அரசின் மறைமுகமான ஆதரவுடன், சீனாவில் போரிடுவதற்காக, அமெரிக்கா விமானிகளை அதிக பணம் கொடுத்து அமர்த்திக் கொண்டார். அப்போது, ஜப்பானின் மீது அமெரிக்கா போர் பிரகடனம் செய்யவில்லை. ஆகையால், இந்த நடவடிக்கை தனிநபர்களின் முயற்சியில் நடைபெற்றது. 1941ஆம் ஆண்டின் பிற்பாதியில், அமெரிக்க படையைச் சேர்ந்த 200க்கும் அதிகமான விமானிகளும் விமானப் பொறியாளர்களும் அப்பாவி மக்கள் என்றமுறையில் சீனாவுக்கு வந்து, அமெரிக்காவின் தொண்டர் விமான படையை அமைத்தனர். அவர்களுக்கு சீன மக்கள் கோலாகரமான வரவேற்பு அளித்தனர். Claire Lee Chennalultஇன் மனைவி சென் சியாங்மே கூறியதாவது,
அப்போது நான் மிகவும் இளமையானவள். வீரரை வனப்ருகின்றேன். வெளிநாட்டவரான Chennalult மிகவும் தூரத்திலிருந்து வந்து, ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான போரில் சீன மக்களுக்கு உதவி செய்தார். ஆகையால், அவர்களை நாங்கள் மிகவும் போற்றுகின்றோம் என்றார் அவர்.
1941ஆம் ஆண்டின் இறுதியில், சீனாவில் நடந்த முதலாவது போரில் பறக்கும் புலிகள் கலந்து கொண்டனர். ஒரு நாள், 10 ஜப்பானிய குண்டு விமானங்கள் குன் மின் நகரின் மீது வான் தாக்குதல் தொடுக்க வந்தன. பறக்கும் புலிகள் படை ஏற்கனவே தயாராக இருந்தது. இந்த போரில், ஒரு விமானத்தைக் கூட இழக்காமல் புலிகள் படை 9 ஜப்பானிய விமானங்களைச் சுட்டு வீழ்த்தியது. இந்த வெற்றி சீனாவில் பெரிதும் பரவலாயிற்று. பல்வேறு செய்தி ஏடுகள் இந்தப் போர் பற்றி விரைவாக நன்றாக அறிவித்தன. சீனர் அனைவரும் பறக்கும் புலிகள் படையை அறிந்து கொள்ளத் துவங்கினர்.
1941ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 7ந் நாள் முதல், ஜப்பானின் மீது போர் தொடுப்பதாக அமெரிக்கா அறிவித்தது. அதற்கு பின், பறக்கும் புலிகள் படை அமெரிக்க விமான படையில் சேர்ந்து, 14வது படைப்பிரிவாகவும், சீனாவிலுள்ள அமெரிக்க விமான படையின் சிறப்பு படைப்பிரிவாகவும் மாறியது. பெரும் எண்ணிக்கையிலான அமெரிக்க விமானிகள் சீனாவுக்கு வந்தனர்.
ஆக்கிரமிப்பு எதிர்ப்பு போரில், பறக்கும் புலிகள் படை சீன படையுடன் நன்றாக ஒத்துழைத்து, ஜப்பானிய படையின் மீது கடும் தாக்குதல் தொடுத்தது. இந்த போரில் இப்படை மொத்தம் 500 விமானங்களை இழந்தது. ஆனால், 2600 ஜப்பானிய விமானங்களையும், 40க்கும் அதிகமான ஜப்பானிய போர் கப்பல்களையும் சுட்டு வீழத்தியது. 66 ஆயிரத்துக்கும் அதிகமான ஜப்பானிய படைவீரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இது சீன விமான படையுடன் சேர்ந்து சீனாவின் வான் எல்லையை ஜப்பானிடம் இருந்து நீட்டது.
1 2 3
|