
ஒட்டக முதுகுப் பாதையைத் திறந்தது பறக்கும் புலிகள் படையின் மற்றொரு யாதனையாகும். 1942ஆம் ஆண்டு மியன்மரின் தலைநகர் ரங்கூன் ஜப்பானிய படையால் கைபற்றப்பட்டது. இதன் விளைவாக, வெளிப்புறத்திலிருந்து சீனாவுக்கும் செல்லும் தரை வழி துண்டிக்கப்பட்டது. ஆக்கிரமிப்பு எதிர்ப்பு போருக்குத் தேவைப்படும் பெருவளவு பொருட்களையும் குண்டுகளையும் சீனாவுக்கு ஏற்றுமதி செய்வது உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினையானது. இந்த நிலைமையில், ஒட்டக முதுகுப் பாதையைத் திறக்க வேண்டும் என்று ஜெனரல் Chennalult யோசனை கூறினர்.
குன் மின் இலிருந்து மியன்மர் வழியாக இந்தியாவுக்கு செல்லும் இந்த பாதையில் பற்க்கும் விமானங்கள் உலகில் மிக உயரமான இமயமலையைக் கடந்து பறக்க வேண்டும். மலைத் தொடர்களின் உச்சி ஒட்டக முதுகு போல் காரணத்துடன் இந்த பாதை ஒட்டக முதுகுப் பாதை என அழைக்கப்படுகின்றது.
83 வயதான லுங் ச்சி மின் தமக்கு 21 வயதாக இருந்த போது பறக்கும் புலிகள் படையில் சேர்ந்தார். இப்படையில் சீன விமானிகளில் அவரும் ஒருவர். அவர் கூறியதாவது,
ஒரு முறை, எரிபொருள் அடைந்த பின், தளத்துக்கு திரும்பும் வழியில், ஜப்பானிய போர் விமானம் எதிர்ப்பட்டது. தரை இறங்க முடியாத நான், தளத்துக்கு அருகில் தாழ்வாக பறக்க வேண்டியிருந்தது. இறக்க முடியும் என்ற தகவலை கிடைத்து நான் விமானத்தை இறக்கிய போது, எரிபொருள் எல்லாம் தீர்ந்துவிட்டது என்றார் அவர்.
ஒட்டக முதுகுப் பாதையின் 3 ஆண்டுகால போக்குவரத்தில், பறக்கும் புலிகள் படை சீனாவுக்கு மொத்த 7 இலட்சம் டன்னுக்கும் அதிகமான சரக்குகளை ஏற்றிச் சென்றது. இதில் சுமார் 500 சரக்கு விமானங்களையும் 1500க்கும் அதிகமான சீன மற்றும் அமெரிக்க விமானிகளையும் இழந்தது.
பறக்கும் புலிகள் படையின் தியாகமும் பங்கும் சீன மக்களின் மனதில் என்றுமே அழியாமல் இருக்கின்றது. சீன சமூக அறிவியல் கழகத்தைச் சேர்ந்த அண்டை வரலாற்றை ஆராயும் டாக்டர் பியன் சியு யே கூறியதாவது,
ஜப்பானிய ஆக்கிரமிப்பு எதிர்ப்பு போரில், பறக்கும் புலிகள் படையும் சீன விமான படையும் சேர்ந்து போராடி மாபெரும் சாதனை புரிந்துள்ளன. சீனாவின் வான் எல்லை கட்டுப்பாட்டுரிமையை மீண்டும் பெறுவதற்கும், இப்போரின் இறுதி வெற்றிக்கும் இது முக்கியத்துவம் வாய்ந்தது. பாராட்டத்தக்கது என்றார் அவர்.
1 2 3
|