
குவெய்லினின் இயற்கை காட்சி, சீனாவில் ஈடிணையற்றது என பழமொழி உண்டு. அங்குள்ள எழிலான பசுமையான அடர்த்தியான மலைகளும் தெளிந்த ஆற்று நீரும் தனிச்சிறப்பியல்புடைய ஈர்ப்பு ஆற்றல் வாய்ந்தவை. இதன் காரணமாக, யாங்சு எனும் சிறு நகருக்கு உலகின் பல்வேறு இடத்து பயணிகள் வருகை தருகின்றனர். அங்கு குடியேறுவோரும் உண்டு. சிச்சியெ என்று அழைக்கப்படும் ஒரு சிறு வீதி, இந்நகரில் மிகவும் புகழ்பெற்ற ஓர் இடமாகும். சில நூறு மீட்டர் நீளமே உடைய இவ்வீதி சுமார் ஆயிரம் ஆண்டுகால வரலாறுடையது. வீதி நெடுங்கிலும் அமைந்துள்ள, பாணியில் நேறுபடும் சிறிய பான அகங்கள், அற்புதமானவை. அவற்றில் பல இங்கு குடியேறியுள்ள வெளிநாட்டவரால் நடத்தப்படுகின்றன. வருகை தருவோரும் உலகின் பல்வேறு இடங்களைச் சேர்ந்தவர்கள்.

ஜப்பானிய நாட்டவரான hayashi katsuyuki என்பவர், இங்கு குடிபெயர்ந்துள்ள அந்நியராவார். வெளிநாட்டவர்களைப் போல, அவரும் யாங்சுவில் சிறிய தங்கும் விடுதியை நிர்வகிக்கின்றார். அதன் முதலாவது மாடியின் உணவகத்தில் சுவை மிக்க ஜப்பானிய உணவை உட்கொள்ளலாம். பல நாடுகளுக்குச் சென்றிருப்பதாக அவர் செய்திமுகவரிடம் தெரிவித்தார். இருப்பினும், யாங்சு வந்த பின், இங்கு குடியேறிவிட முடிவு செய்தேன். யாங்சுவின் சுற்றுப்புறங்களிலான எழிலான இயற்கை காட்சி மட்டுமல்ல, எளிமையான உள்ளூர் பழக்க வழக்கங்களும் தன்னை ஈர்த்துள்ளதாக அவர் தெரிவித்தார். இந்நகரத்தின் ஓர் உறுப்பினர் எனக் கருதி, பொது மக்களுக்கு நன்மை பயக்கும் பலவற்றை அவர் செய்துள்ளார். அவர் கூறியதாவது, 1996ஆம் ஆணஅடு நான் முதன்முறையாக இங்கு வந்து, இயற்கை காட்சியைக் கண்டுகளிக்கத் திட்டமிட்டேன். ஆனால், பின்னர் இங்கு குடியேற தீர்மானித்தேன்.1998ஆம் ஆண்டு, லீச்சாங் ஆற்றங்கரையோரத்தில் அமைந்துள்ள லௌச்சேசான் மலையில் மலை ஏறு பாதையொன்றைக் கட்டியமைத்தேன். மேலும், நட்புறவு பந்தல், சமாதான பந்தல் முதலியவற்றையும் கட்டியமைத்தேன் என்றார் அவர்.
1 2 3
|