
காய்கறி பயிரிடும் போது, நிலத்தைத் தோண்டுவதில் எங்களுக்கு உதவுவார்கள். வெளிநாட்டு மாணவர்களையும் நான் வரவேற்றேன். அவர்கள், எங்களுடந் சேர்ந்து, உழைத்தனர். உரமிட்டனர். நன்று என அவர்கள் கூறியுள்ளனர். ஏனெனில் நகரங்களில் இதெல்லாவற்றையும் அவர்கள் அனுபவித்திருக்கவில்லை. யாங்சு நகரத்தின் சுற்றுப்புறங்களிலுள்ள குக்கிராமங்களில் சுற்றுலா மேற்கொள்ளும் போது, மொழிப்பிரச்சினை ஏற்பட்டது. இங்குள்ள கிராம வாசிகள், அந்நிய மொழி பேசுகின்றனர். பயணிகளுடன் எளிய முறையில் பேச முடியும். யாங்சு மாவட்ட அரசு அதிகாரியான சாங்சிகாங் செய்திமுகவரிடம் கூறியதாவது இங்கே, 80 விழுக்காட்டினர் அயல்மொழி பேச முடியும். குழந்தைகளும் அப்படியே. 50 விழுக்காட்டு குடும்பங்கள், வரவேற்புப் பணியில் ஈடுபடுகின்றன. மகளிர், சுற்றுப்பயணத்தின் வழிகாட்டியாயிருப்பது, மிகப் பெரிய தனிச்சிறப்பியல்பு ஆகும். ஆண்கள் வயல் வேலை செய்கின்றனர். ஊற்றுநீர் விற்கும் போது, பெண்கள் வெளிநாட்டுப் பயணிகளுடன் பேசுவதன் மூலம் கற்றுத்தேர்ந்தனர் என்றார் அவர். 1 2 3
|