• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-09-12 16:32:52    
யாங்சு நகரின் இயற்கை காட்சி

cri

யாங்சுவின் எழில் மிக்க இயற்கை காட்சியையும் வயல் காட்சியையும் கண்டு ரசிக்க, நகரிலுள்ள மிதி வண்டி கடையில் மிதி வண்டியை வாடகைக்கு எடுத்து, 40 நிமிடப் பயணத்துக்குப் பின், யியுலியான் மலை எனும் இயற்கை காட்சிப் பிரதேசத்தை அடையலாம். யியுலியான் மலை என்பது அற்புதமான மலையாகும். மலைச் சிகரத்தில் இயற்கையான வட்டமான துவாரம் உண்டு. மலையடிவாரத்திலிருந்து மேலே பார்த்தால், வட்டமான நிலா, இம்மலைச்சிகரத்தில் பொறிக்கப்படுவது போன்ற காட்சி தென்படுகின்றது. இம்மலையின் சுற்றுப்புறங்களிலும் இயற்கை காட்சித் தலங்கள் பல இருக்கின்றன. மலைக்கு அருகில் பண்டைய பெரிய ஆல மரம் ஒன்று உள்ளது. வரலாற்றில் லியூசான்சியெ எனும் நாட்டுப்புறப் பாடகி, பாட்டு பாடும் இடமாகும் என்று கூறப்படுகின்றது. வறிய குடும்பத்தில் பிறந்த அவள், தன் இனிமையான பாட்டொலி மூலம் மதிப்பையும் காதலையும் வென்றெடுத்தாள். இது பற்றிய கதை, சீனாவில் பரவியுள்ளது. பசி ஏற்படும் போது, இம்மலை நெடுகிலும் உள்ள விவசாயி குடும்பத்து வீட்டில், உணவு உண்ணலாம்.

காரணம், ஒவ்வொரு குடும்பமும், ஒரு சிறிய தங்கும் விடுதியாகும். பயணிகளுக்கு உணவு உறைவிட வசதி வழங்கும். தாங்கெய்வுன் எனும் அம்மையார் தங்கும் விடுதியின் உரிமையாளராவார். இத்தகைய தங்கும் விடுதியில் ஒரு இரவுக்கான கட்டணம், அறை வாடகை 100 யுவான், அதாவது 600 ரூபாய் ஆகும். அன்றி, சொந்தமாக சமைக்கலாம். பயணிகளுடன் இணைந்து, விவசாய பணியிலும் குடும்ப வேலையிலும் ஈடுபடுவது, அவருக்கு மிகவும் பிரியம். இவ்வாறு, பயணிகள் கிராமப்புற வாழ்க்கையை நேரில் உணர்ந்துகொள்ளலாம் என்றார் அவர். அவர் கூறியதாவது, சில பயணிகள் எங்களுடன் சேர்ந்து, நெல் நாற்றுகளை நடுதல், பயிரிடுதல், கதிரடித்தல் ஆகியவற்றில் ஈடுபட விரும்புகின்றனர்.

1  2  3