40 ஆண்டுகளுக்கு முன்பு, சாம் வோல்ட்டன் எனும் அமெரிக்கர், தமது நகரில் அன்றாடத் தேவைப் பொருட்களை விற்கும் மளிகை சாமான் கடையைத் திறந்தார். Wal-Mart என்பது அதன் பெயர். சில பத்து ஆண்டுகளின் வளர்ச்சி மூலம், இச்சிறு மளிகை சாமான்கள் கடை, ஆண்டுக்கு 28 ஆயிரம் கோடி டாலர் விற்பனை மதிப்பு உடைய உலகின் முதலாவது பெரிய சில்லறை விற்பனை நிறுவனமாக வளர்ச்சியடைந்துள்ளது. இந்த Wal-Mart அங்காடி சீனாவில் 1996ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாக நுழைந்தது.
உலகின் பல்வேறு இடங்களில் சங்கிலித் தொடர் போல கிளைகள் சீனாவிலும் அமைக்கப்பட்டன. பல Wal-Mart கடைகளில், வண்ண நிறமுடைய "Wal-Mart" சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. Wal-Mart பேரங்காடியில் 20 ஆயிரம் வகை பொருட்கள் விற்கப்படுகின்றன.
சில்லறை விற்பனைத் துறையில், விலை மேம்பாடு, தொழில் நிறுவனத்தின் வெற்றிக்கு இன்றியமையாத காரணியாகும். நீண்டகாலமாக, "நாள்தோறும் மலிவு விலை" என்ற ஆதாயத்தை நுகர்வோருக்கு Wal-Mart தந்துள்ளது. Wal-Mart நிறுவனத்தின் வெளிநாட்டு விவகார தலைமை கண்காணிப்பாளர் Xu Jun இது பற்றி கூறியதாவது:
"அன்றாட அலுவலில், செலவை சிக்கனப்படுத்துகின்றோம். அன்றாட அலுவலிலும், அலுவலகத்திலும், பின்னணி சேவையிலும் செலவை மிச்சம் பிடித்து, அதை விலைச் சலுகையாக நுகர்வோருக்கு தருகிறோம். இதன் மூலம், Wal-Martயில் நுகர்வோர் பொருட்களை வாங்கும் போது, நீண்டகாலத்திற்கு விலைச் சலுகையை அனுபவிக்கலாம்." என்றார்.
1 2 3
|