• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-09-12 22:04:27    
சீனாவில் Wal-Mart அங்காடியின் வளர்ச்சி

cri

உலக மயமாக்கப் போக்கில், எந்த ஒரு தொழில் நிறுவனமும், உலகின் பல்வேறு இடங்களில் காணப்படும் வேவ்வேறான சந்தை நிலைமைக்கு ஏற்ப செயல்படும் ஆற்றல் இன்றியமையாதது. தற்போது, 10 நாடுகளில் 5 ஆயிரத்துக்கு அதிகமான கடைகளை Wal-Mart திறந்து விட்டது. வாரந்தோறும் 14 கோடி வாடிக்கைக்காரர்களுக்கு சேவை செய்யப்படுகிறது. ஆனால், எந்த ஒரு நாட்டிலும் Wal-Mart கிளையை திறக்கும் போது, உள்ளூர் நுகர்வோரின் தேவையை நிறைவு செய்யும் பொருட்டு, உள்ளூர் சந்தையின் நிலைமை, பண்பாட்டு பின்னணி, மக்களின் நுகர்வு பழக்க வழக்கம் ஆகியவற்றுக்கிணங்க, கடை வடிவமைக்கப்படுகிறது. இந்த வகையில், சீனாவில் கடைக்கான இடத்தை Wal-Mart தெரிவு செய்தது, முக்கியத்துவம் வாய்ந்தது என்று Xu Jun தெரிவித்தார். அவர் கூறியதாவது:

"அமெரிக்க நாட்டில், Wal-Martயின் கடைகள் பொதுவாக புறநகர்களில் திறக்கப்படுகின்றன. அமெரிக்காவில் நுகர்வோர் பொதுவாக காரில் Wal-Martக்கு சென்று பொருட்களை வாங்குக்கின்றனர். ஆனால், சீனாவில், Wal-Martயின் கடைகள் பெரும்பாலும் நகரின் மையப்பகுதிகளில் திறக்கப்பட்டுள்ளன. சீனாவின் நுகர்வோர் பொதுவாக கடைகளுக்கு நடந்து சென்றோ, சைக்கிளில் சென்றோ வாங்குவது வழக்கம்." என்றார்.

தொழில் நிறுவனத்தின் பணியாளர்கள் உள்ளூர் சாரர்களாக இருப்பது சீனாவில் Wal-Mart வளர்ச்சிக்கு மற்றொரு தனிச்சிறப்பான காரணம் ஆகும். தற்போது, சீனாவில் Wal-Martயின் அனைத்து கடைகளும், கொள்முதல் மற்றும் வினியோக மையங்களும் சீனப்பணியாளர்களால் நிர்வகிக்கப்படுகின்றன. Wal-Martயின் உலகளாவிய துணை தலைமை இயக்குநர் John B. Menzer கூறியதாவது:

"சீனாவில் 25 ஆயிரம் பணியாளர்கள் இருக்கின்றனர். அனைத்து கடைகளின் தலைவர்களும் சீனர்களே ஆவர். பணியாளர்களில் 5 பேர் மட்டுமே அன்னியர் ஆவர். சீனப் பணியாளர்கள் Wal-Martயில் தமது தொழில் நுட்பத்தையும் பதவியையும் உயர்த்த முடியும்." என்றார் அவர்.

Wal-Martயின் இச்செயல் குறித்து, சீன வெளிநாட்டு வர்த்தக பல்கலைக்கழகத்தின் சர்வதேச பொருளாதார வர்த்தக கல்லூரியின் பேராசிரியர் Zhu Ming Xia பேசுகையில், சீனாவில் உள்ளூர் பணியாளர்களைச் சேர்ப்பது, வாடிக்கைக்காரர்களின் மனதில் Wal-Mart பற்றிய புகழை உயர்த்துவதற்கும், வாடிக்கைக்காரர்களுடனான இடைவெளியை குறைப்பதற்கும் துணை புரியும். இது, சில்லறை விற்பனை தொழில் நிறுவனங்களுக்கு மிகவும் முக்கியமானது. இதற்கிடையில், சீனாவில் உள்ள கடைகளின் நிர்வாகத் துறையில் மேலும் அதிக உள்ளூர் திறமைசாலிகளை ஈர்க்க வேண்டும் என்று அவர் யோசனை அளித்தார்.

1  2  3