• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-09-12 22:04:27    
சீனாவில் Wal-Mart அங்காடியின் வளர்ச்சி

cri

சீனாவில் Wal-Mart கடைகளில் உள்ளூர் மயமாக்க நடவடிக்கைகள் அதிகம். எடுத்துக்காட்டாக, அதிகப்படியான சீனத் தனிச்சிறப்புடைய சுதேசிப் பொருட்கள் கடைகளில் இருக்கின்றன. தவிர, முழுமையான பின்னணி மற்றும் வினியோக முறைமை இதற்கு உண்டு. உயர் தொழில் நுட்பமுடைய பின்னணி மற்றும் கொள்முதல் மையத்தை நிறுவுவதன் மூலம், சுற்று வட்டாரங்களில் உள்ள கடைகளுக்கு பொருட்களை வழங்கி, பின்னணி சேவைச்செலவை குறைக்க பாடுபடுகின்றது. உலக சில்லறை விற்பனை தொழில் நிறுவனங்களிடையே, Wal-Mart முதலிடம் வகிப்பதற்கு இது முக்கிய காரணமாகும். தற்போது, சீனாவின் Shen Zhen நகரிலும் Tian Jin நகரிலும் நவீனமான கொள்முதல் மையங்களை Wal-Mart நிறுவியுள்ளது.

தற்போது, சீனாவில் Wal-Martயின் கொள்முதல் மதிப்பு, வெளிநாடுகளில் கொள்முதல் செய்யும் மதிப்பில் முதலிடம் வகிக்கின்றது. Wal-Mart சீனாவில் படிப்படியாக வளர்ச்சியுற்று வருவதுடன், சீனாவில் மேலும் அதிக உள்ளூர் வினியோக வணிகர்கள், Wal-Martயின் உலக கொள்முதல் தொடர் அமைப்பில் சேர்வார்கள் என்று Wal-Martயின் உலகளாவிய துணை தலைமை இயக்குநர் John B. Menzer கூறினார். அவர் மேலும் கூறியதாவுது:

"2004ஆம் ஆண்டில், நேரடி மற்றும் மறைமுக வழி மூலம், சீனாவில் 1800 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள வணிகப் பொருட்களை Wal-Mart கொள்முதல் செய்து, உலகெங்கும் உள்ள Wal-Martயின் கடைகளில் விற்பனை செய்தது. இனிமேல், சீனாவில் தனது கொள்முதலை Wal-Mart தொடர்ந்து விரிவாக்கும். விலை குறைவான தரமிக்க வணிகப் பொருட்களையும் சிறந்த சேவையையும் வாடிக்கைக்காரர்கள் எதிர்பார்க்கின்றனர். Wal-Martயின் கொள்முதல் தொடர்பினால், சீனாவின் வணிகப் பொருட்களை உலகில் மேலும் அதிக வாடிக்கைக்காரர்கள் ஏற்றுக்கொள்கின்றனர். சீனாவில், Wal-Martயின் கொள்முதல், சீனாவின் தயாரிப்புத் தொழிலின் வளர்ச்சியை விரைவுபடுத்தி, சீனப் பொருளாதார வளர்ச்சிக்கு பயன்மிக்க பங்காற்ற வேண்டும் என்று நாங்கள் விரும்புகின்றோம்." என்றார் அவர்.

2004ஆம் ஆண்டின் டிசம்பர் 11ஆம் நாள், உலக வர்த்தக அமைப்பில் சேர்ந்த போது அளித்த வாக்குறுதியை சீனா கடைப்பிடித்து, அன்னிய முதலீட்டுத் தொழில் நிறுவனங்களுக்கு சில்லறை விற்பனை தொழிலை பன்முகங்களிலும் திறந்து வைத்தது. சீனா வெளிநாடுகளுக்கு மேலும் திறந்து வைப்பது, Wal-Martக்கு மாபெரும் வளர்ச்சி வாய்ப்பை வழங்கியுள்ளது. சீனாவில் Wal-Mart நீண்டகால முதலீடு செய்யும். அடுத்த காலக்கட்டத்தில், சீனாவின் இரண்டாவது நிலை நகரங்களிலும் மேற்கு பகுதியிலுள்ள நகரங்களிலும் Wal-Mart அங்காடிகள் வளர்ச்சியடையும்.


1  2  3