• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-09-15 09:35:45    
பெய்ச்சிங்கிலுள்ள இத்தாலி உணவகம்

cri

சீனாவிற்கு வருவோர், சீனத் தேச உணவுப் பண்பாடு பற்றி நினைப்பது இயல்பே. ஆனால், சீனாவில் அதிக நாட்கள் தங்கியிருப்பவர்கள் தங்களது ஊர் உணவை உண்ண ஆசைப்படுகின்றனர்.கவலைப்பட வேண்டாம். பெய்ச்சிங், சாங்ஹாய் போன்ற பெரிய நகரங்களில் வெளிநாட்டு உணவு விற்கப்படும் உணவகங்கள் அதிகமாக உள்ளன. இன்றைய நிகழ்ச்சியில் பெய்ச்சிங்கிலுள்ள 2 இத்தாலி உணவகங்கள் பற்றி கூறுகின்றோம். பெய்ச்சிங் மாநகருக்கு வரும் வெளிநாட்டு நண்பர்கள் சீன உணவைச் சாப்பிட்டு, சாப்பிட்டுச் சலித்துப்போனால், இந்த உணவகங்களுக்குச் சென்று வித்தியாசமான உணவை உண்ணலாம். கடந்த சில ஆண்டுகளாக, PIZZA HUT எனப்படும் புகழ்பெற்ற பிஸா விடுதி, சீனாவின் பல்வேறு பெரிய நகரங்களில் நிறுவப்பட்டுள்ளது. இந்த இத்தாலி ரொட்டி சீனாவில் நன்கு விற்பனையாகின்றது. இதனால், சீன மக்களின் விருப்பம் நிறைவு செய்யப்படும் அதே வேளையில் இவ்வாய்ப்பினைப் பயன்படுத்திய வணிகர் பலரும் சீனாவின் பெரிய மற்றும் சிறிய நகரங்களிலும் இத்தாலி உணவகங்களை அமைத்துள்ளனர். பெய்ச்சிங் மாநகரில் இத்தகைய உணவகங்கள் அதிகமாக உள்ளன.

சில உணவகங்களில் முக்கிய சமையல்காரர் இத்தாலியராக இருக்கிறார். இன்று நாங்கள் நேயர்களுக்கு அறிமுகப்படுத்தும் இரண்டு உணவகங்கள், பெய்ச்சிங்கிலுள்ள பல மேலை நாட்டு உணவகங்களில் 2 சிறிய உணவகங்களாகும். ஆனால் அவை தத்தமது தனிச்சிறப்பு காரணமாகப் பெய்ச்சிங்கில் புகழ்பெற்றுள்ளன. பல்கலைக்கழகப் பகுதியில் அமைந்துள்ள TAFI உணவகம் பற்றி முதலில் கூறுகின்றோம். வுதௌகௌ பாதைக்கு அருகில் அமைந்துள்ள இவ்வுணவகம் பெரியதல்ல. ஆனால் பிரகாசமான வசதியான பரந்த உணவகம் இது. இவ்வுணவகத்தில் விற்கப்படும் முக்கிய உணவு இத்தாலி உணவு. வாடிக்கைக்காரர்களில் பெரும்பாலோர் சீனாவில் கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்கள். பெய்ச்சிங் அந்நிய மொழி பல்கலைக்கழகத்தில் பயிலும் ஜப்பானிய மாணவி OHIGASHI CHIHARU இவ்வணவகத்துக்கு அடிக்கடி வருகை தருகின்றார். உணவு விலை மலிவு என்பது இவ்வுணவகத்தின் ஒரு சிறப்பு என்று அவர் கூறினார்.

1  2  3