
அவர் கூறியதாவது, இங்கு ஆட்கள் அதிகமில்லை. குறைவாகவும் இல்லை. இதனால் பரவாயில்லை. அத்துடன், பணியாளர்கள் நன்கு சேவை புரிகின்றனர். பெய்ச்சிங்கின் கிழக்கு பகுதியில், இத்தாலி கறி விற்கப்படும் உணவகங்கள் பல இருந்தாலும் அவற்றின் உணவு விலை அதிகம். மாறாக, இவ்வுணவகத்தில் விலை அதிகமில்லை என்றார் அவர். இவ்வுணவகத்தில் நாள்தோறும் மத்தியானத்தில் buffet விருந்து இருப்பதும் வெளிநாட்டு மாணவர்கள் வருகை தருவதற்கு ஒரு முக்கிய காரணமாகும். ஒரு வேளைக்கு 29 யுவான் செலவழித்தால் போதும். இது மலிவான விலை என்று கூறலாம். TAFI உணவகத்தின் உரிமையாளர் ஒரு ஜப்பானியர். இவ்வணவகத்தின் பணியாளர்களனைவரும் சீனர்கள். தாமும் சமையல்காரர்களும் இத்தாலியர் அல்ல என்றாலும் இத்தாலி உணவு மற்றும் கறி சமைப்பதில் தேர்ச்சி பெற்றவர்கள் என்றார் அவர்.

அவர் மேலும் கூறியதாவது, முன்பு ஜப்பானில் இருந்த போது, இத்தாலி கறி சமைத்தேன். எனக்கு ஓரளவு அனுபவம் உண்டு. வாடிக்கைக்காரர்களுக்கு மனநிறைவு தரும் பொருட்டு, நான் பெரும் முயற்சி செய்கிறேன் என்றார் அவர். இதர உணவகங்களுடன் ஒப்பிடும் போது, TAFI உணவகத்தில் விற்கப்படும் கறிகள் தனிச்சிறப்பு வாய்ந்தவை. கறிகளின் வகை அதிகமில்லை என்றாலும், PIZZA, இத்தாலி நூடுல்ஸ் உள்ளிட்ட சாதாரண பாரம்பரிய இத்தாலி உணவு வகைகள் உள்ளன. தவிர, சுவையான இத்தாலி சிற்றுண்டிகளும் விற்கப்படுகின்றன. பாரம்பரிய சுவையான இத்தாலி உணவுகளைத் தயாரிப்பதற்காக, அவற்றுக்கான மூலப்பொருட்களில் பெரும்பாலானவை இறக்குமதி செய்யப்பட்டவை. அடுத்து, மற்றொரு உணவகமான Annie's Cafe உணவகம் பற்றி கூறுகின்றோம். இவ்வுணவகத்தில் இத்தாலி உணவுகள் மட்டும் விற்பனையாகின்றன. இது, கிழக்கு பெய்ச்சிங்கின் சௌயாங் பூங்காவுக்கு அருகில் அமைந்துள்ளது. இதற்கும் தூதரக வட்டாரத்துக்குமிடையில் தூரம் அதிகம் இல்லை.
1 2 3
|