• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-09-29 15:24:12    
பெய்ச்சிங் மாரத்தன் ஓட்டம்

cri

சீனாவில் நடைபெறும் பல சர்வதேச மாரத்தன் ஓட்டங்களில் பெய்ச்சிங் சர்வதேச மாரத்தன் ஓட்டப்பந்தயம் மிகவும் நீண்ட வரலாறுடையது. தரம் உயர்ந்தது. 1981ல் முதலாவது பெய்ச்சிங் சர்வதேச மாரத்தன் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது முதல், ஆண்டுதோறும் ஒரு முறை நடைபெற்றுவருகின்றது. இப்போட்டி படிப்படியாக உலக புகழ்பெற்ற மாரத்தன் பந்தயமாக மாறிவிட்டது. ஆண்டுதோறும் இதில் பங்கெடுக்கும் விளையாட்டு வீரர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்தைத் தாண்டியுள்ளது. பெய்ச்சிங் சர்வதேச மாரத்தன் ஓட்டப்பந்தயம் பொதுவாக ஒவ்வொரு ஆண்டின் அக்டோபர் திங்களில் நடைபெறும். இவ்வாண்டு இப்போட்டி அக்டோபர் 16ஆம் நாள் நடைபெறும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. அப்போது பெய்ச்சிங் மாநகரில் வானிலை நன்றாக இருக்கும். அவ்வளவு வெப்பம் இருக்காது. குளிராகவும் இருக்காது. மாரத்தன் ஓட்டத்துக்கு இது மிகவும் ஏற்றதாக இருக்கும்.

மாரத்தன் ஓட்டப்பந்தயத்தில் முழு மாரத்தன் ஓட்டம், அரை தூர மாரத்தன் ஓட்டம், 10 கிலோமீட்டர் தூர மாரத்தன் ஓட்டம், 5 கிலோமீட்டர் தூரச் சிறிய மாரத்தன் ஓட்டம் ஆகிய 4 வகைகள் இடம்பெறுவதால், இப்போட்டியில் கலந்துகொள்ள விரும்புவோர், தத்தமது உடல் நிலைக்கேற்ப, வேறுபட்ட தூரமுடைய மாரத்தன் போட்டிகளைத் தேர்ந்தெடுக்கலாம். மாரத்தன் ஓட்டப்பந்தயத்தின் துவக்க இடம், நகர மையப் பகுதியிலுள்ள டிஅன்மன் சதுக்கம். முடிவு இடம் வேறுபடுகின்றது. முழு மாரத்தன் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொள்ள வேண்டுமானால், நகரப் பகுதியின் கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளுக்கு ஊடாகச் சென்று, இறுதியில் நகரின் வட பகுதியிலுள்ள ஒலிம்பிக் விளையாட்டு மையம் சென்றடையும். இத்தகைய மாரத்தன் ஓட்ட பாதையை வெளிநாடுகளின் ஓய்வு நேர விளையாட்டு வீரர்கள் மிகவும் விரும்புகின்றனர் என்று சீன சர்வதேச சுற்றுலா பணியகத்தின் அதிகாரி சாங்சௌ கூறினார். அவர் மேலும் கூறியதாவது, மாரத்தன் ஓட்டப்பந்தயத்தின் துவக்க இடம் பெய்ச்சிங் டிஅன்மன் சதுக்கம். டிஅன்மன் சதுக்கத்தின் வட பகுதியில் பெய்ச்சிங் அரண்மனை அருங்காட்சியகம் அமைந்துள்ளது.

1  2  3