• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-09-29 15:24:12    
பெய்ச்சிங் மாரத்தன் ஓட்டம்

cri

இதில், சீனத் தேசிய இனங்களின் பாரம்பரிய கட்டடம் காணப்படுகிறது. சிறுபான்மை தேசிய இனங்களின் பழக்க வழக்கங்களை உணரலாம். பெய்ச்சிங்கில் நடைபெற்ற சர்வதேச மாரத்தன் ஓட்டப்பந்தயத்தில் 2 முறை கலந்துகொண்ட பெய்ச்சிங் உடல் பயிற்சிப் பல்கலைக்கழக ஆசிரியர் லீ யுவான்செனுக்கு இவ்விடம் மிகவும் பிடிக்கும். அவர் கூறியதாவது, மாரத்தன் ஓட்டப்பந்தயத்தின் முடிவு இடத்துக்கு அருகிலுள்ள சீனத் தேசிய இனப் பண்பாட்டுப் பூங்கா எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. சாதாரண நாட்களில் நேரம் கிடைக்கும் போது, இவ்விடத்துக்கு வருகை தருவது வழக்கம் என்றார். மாரத்தன் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொள்வோர், இப்பூங்கா வழியாகச் சென்று சற்று நேரத்திற்குப் பின்னர், ஒலிம்பிக் விளையாட்டு மையத்தில் நுழைந்து, மாரத்தன் போட்டியின் இறுதி இடத்தை அடைவார்கள். சீன சர்வதேச சுற்றுலாப் பணியகத்தின் அதிகாரி கொவன்பிங் கூறியதாவது, 2008ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்தும் நகராகப் பெய்ச்சிங் மாநகரம் நிர்ணயிக்கப்பட்டதுடன், நகரப் பாதை மற்றும் விளையாட்டுச் சாதனங்களின் கட்டுமானப் பணி மும்முரமாக நடைபெற்றுவருகின்றது. ஆண்டுதோறும் சர்வதேச மாரத்தன் ஓட்டப்பந்தயத்தை நடத்துவதற்கு நிச்சயம் மேலும் சிறந்த வசதியும் சூழ்நிலையும் வழங்கப்படும் என்றார்.

 


1  2  3