• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-09-29 15:24:12    
பெய்ச்சிங் மாரத்தன் ஓட்டம்

cri

அரண்மனை அருங்காட்சியகமானது, பெய்ச்சிங்கிற்கு வரும் சுற்றுலா பயணிகள் முதலில் பார்க்க விரும்பும் இடம். அத்துடன், உலகின் மிகப் பெரிய, முழுமையாகப் பாதுகாக்கப்பட்டுள்ள பண்டைக் கால அரண்மனைக் கட்டடங்களும் ஆகும். 1987ஆம் ஆண்டு, அது, யுனெஸ்கோவால் உலக மரபுச்செல்வப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது என்றார். டிஅன்மன் சதுக்கத்தின் பரப்பளவு சுமார் 4 லட்சம் சதுர மீட்டர். சீனாவில் மிக அதிகமான பரப்பளவுடைய சதுக்கம் இது. இச்சதுக்கத்தின் வட பகுதி, டிஅன்மன் வாயில் முகப்பு(rostrum). சுமார் 30 மீட்டர் உயரமுடைய இந்தச் செந்நிற வாயில் முகப்பு, 1420ல் கட்டப்பட்டது. சீனாவின் மிங் மற்றும் சிங் வமிசக் காலங்களில் முக்கிய சடங்கு நடைபெறுவதற்கு, மன்னர்கள் வெளியே சென்ற போதும் திருமணம் செய்த ராணியை வரவேற்ற போதும் இந்நுழைவாயில் மூலம் செல்ல வேண்டும்.

1949ஆம் ஆண்டு அக்டோபர் முதல் நாளன்று சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட போது, அப்போதைய சீன அரசு தலைவர் மாசேதுங் டிஅன்மன் சதுக்கத்தின் வாயில் முகப்பில் நின்ற வண்ணம் சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டுள்ளதாக அறிவித்தார். டிஅன்மன் வாயில் முகப்புக்கு வடக்கே அரண்மனை அருங்காட்சியகம் உள்ளது. இந்த அருங்காட்சியகம், தடுக்கப்பட்ட நகர் என்றும் அழைக்கப்படுகின்றது. அது, சீனாவின் மிங் மற்றும் சிங் வமிசக் கால அரண்மனை அருங்காட்சியகம். 24 மன்னர்கள் அடுத்தடுத்து இவ்விடத்தில் வசித்தனர். இவ்விடத்தில் சீன பாணியிலான மாபெரும் கட்டடங்கள் உள்ளன. சீனாவின் பண்டை கால மதிப்பிடற்கரிய கலைப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மாரத்தன் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொள்வோர், டிஅன்மன் சதுக்கத்திலிருந்து புறப்பட்ட பின்னர், மிகவும் விசாலமான பாதையொன்றில் தொடர்ந்து மேற்கு திசையை நோக்கி ஓட வேண்டும். இந்த விசாலமான பாதை, பெய்ச்சிங் மாநகரின் புகழ்பெற்ற சாங்அன் பாதை. முழு மாரத்தன் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொள்வோர், முடிவு இடம் சென்றடையும் போது, சீனத் தேசிய இனப் பண்பாட்டுப் பூங்கா ஊடாகச் செல்லுவார்கள். சீனத் தேசிய இனப் பண்பாட்டுப் பூங்காவின் பரப்பளவு, 50 ஹெக்டருக்கு அதிகம்.

1  2  3