• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-09-19 11:58:54    
உலகமெங்கும் ஒரே மொழி

cri

ஆங்கில மொழியைக் கற்றுக்கொள்ளும் சீன மக்கள்

இன்றைக்கு உலகெங்கும் சுமார் 6800 மொழிகள் பேசப்படுகின்றன. நாடுகளின் எண்ணிக்கையை விட மொழிகளின் எண்ணிக்கை அதிகம் என்கிறார்கள். உண்மைதான். ஒவ்வொரு நாட்டிலும் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளும், பல கிளை மொழிகளும், ஏராளமான வட்டார வழக்குகளும் உள்ளன. சீனாவில் 7 மொழிகளும் இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட 18 மொழிகளும் உள்ளன.

இவ்வாறு மொழிகள் பல்கிப் பெருகி விட்டதால், மனிதர்கள் ஒருவர் கருத்தை இன்னொருவர் புரிந்து கொள்வதில் சிக்கல் ஏற்படுகிறது. தமிழ்நாட்டின் சேலத்தில் உள்ள காளியப்பனால், அமெரிக்காவின் சேலத்தில் உள்ள கிறிஸ்டோபர் பேசுவதைப் புரிந்து கொள்ள முடிவது இல்லை. இலங்கையின் யாழ்ப்பாணப்பகுதியில் ஒரு திருநெல்வேலி இருக்கிறது. தமிழ் நாட்டிலும் ஒரு திருநெல்வேலி இருக்கிறது. ஆனால் இந்த இரண்டு திருநெல்வேலிக்காரர்களும் சந்திக்கும் போது, ஈழத்துக்காரர் கதைப்பதை நமது நெல்லைத் தமிழரால் அவதானிக்க முடிவதில்லை.

உலகிலே நாய்கள் ஒரே மாதிரி தான் குரைக்கின்றன. சீனத்து நாய் குரைப்பதற்கும், அமெரிக்க நாய் குரைப்பதற்கும் இடையே வேறுபாடு இல்லை. எல்லா நாடுகளிலும் குயில்கள் கூவுவதும், காகங்கள் கரைவதும் ஒரே மாதிரி தான். ஆனால் மனிதர்களுக்கு இடையே மட்டும் ஏன் இந்த வேறுபாடு? ஏன், ஒரு பகுதி மனிதன் பேசுவது இன்னொரு மனிதனுக்குப் புரிவது இல்லை?

1  2  3