• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-09-19 11:58:54    
உலகமெங்கும் ஒரே மொழி

cri

சீன மொழி மாநாடு

இன்றைக்கு மொழி என்பது வெறும் ஒலியாகவும், எழுத்துக்களாகவும் இருப்பதில்லை. பொருளாதார சக்தி மற்றும் அரசியல் அதிகாரத்தின் ஒருவடிவமாக மொழி திகழ்கிறது. ஒரு நாடு வலுவும், வளமும் பெற்றுத்திகழும் போது அது வல்லரசாகிறது. அதன் மொழி உலக அரங்கிலே முக்கியத்துவம் பெறுகிறது. கருத்து வெளியீட்டு சாதனமான ஒரு மொழி, அதிகாரத்தை பரப்பும் ஆயுதமாக மாறிவிடுகிறது. 16ஆம் நூற்றாண்டுக்குப்பிறகு உலகெங்கும் ஆங்கிலம் பரவியதற்கும், அதனுடைய பொருளாதார வல்லமையே துணை புரிந்தது. இன்றைக்கு அதே ஆங்கிலத்தை ஆயுதமாகக் கொண்டு மேலை நாடுகளுக்கு சவால் விடும் நிலையில் இந்தியா உள்ளது. சீனாவும் ஆங்கிலத்தின் முக்கியத்தைப் புரிந்து கொண்டு விட்டது. சனி, ஞாயிறு கிழமைகளில் நிறைய இளைஞர்கள் ஆங்கில வகுப்புக்காக சுரங்சுரயிலில் செல்வதைக் காண்கிறேன். பாமரமக்கள் கூட, கடை விற்பனையாளர்கள் கூட, ஹாலா, ஹாலா, சியேசியே என்று கூறுவதற்குப் பதிலாக ஓகே ஓகே, தாங்க்யூ என்று கூறி பெருமைப்பட்டுக் கொள்கின்றனர். இன்னும் இருபதாண்டுகளில், சீனாவில் ஆங்கிலம் பேசுவோரின் எண்ணிக்கை உலகின் மற்றபகுதிகளில் ஆங்கிலத்தை தாய்மொழியாகக் கொண்டவர்களின் எண்ணிக்கையை விஞ்சி விடும் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. இந்த ஆங்கில மொழி ஆசை சீன மக்களிடையே வேரூன்றியிருப்பதற்குக் காரணம், பொருளாதார வேட்கை. அதே வேளையில், உலகின் இதர பகுதிகளில் உள்ள மக்கள் சீன மொழியைக் கற்பதில் பேரார்வம் கொண்டுள்ளனர். சீனாவுக்கு வெளியே 3 கோடிக்கும் அதிகமான மக்கள் சீன மொழி கற்பதாக அண்மையில் பெய்ஜிங்கில் முதலாவது சீன மொழி மாநாடு நடத்தப்பட்ட போது ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கப்பட்டது.

சீன மொழி மாநாடு

இன்றைக்கு உலக மக்கள் அனைவரும் ஒரே மொழி பேச வேண்டுமா என்ற கேள்விக்கு விடை காண்பது கடினம். மொழியானது, தந்திக்குறி எழுத்து போல, வெறும் கருவியாக மட்டுமே இருந்தால் இது சாத்தியம்தான். ஆனால், ஒரு மொழிக்குப் பின்னால் ஒரு பெரிய பண்பாட்டு மரபே இருக்கிறது. அது ஒரு கலாச்சாரத்தின் அடையாளமாகத் திகழ்கிறது. அதுமட்டுமல்ல, ஒரு கலாச்சாரத்திற்கு ஊட்டச்சத்தாகவும், மொழி பயன்படுகிறது. மேலும், மொழி ஒரு சிறந்த கலைவடிவமாகவும் இயங்குகிறது. காலத்தால் அழியாத பல காவியங்கள் மொழிவளத்தால்தான் நிலைபெற்று நிற்கின்றன.

எனவே, இப்படிப்பட்ட நிலையில், மனிதர்கள் ஒரே மொழி பேசிய ஆதிகாலத்திற்குத் திரும்புவது இயலாதது.

ஆனால், உலகில் பெரும்பாலான் மக்கள் புரிந்து கொள்ளக் கூடிய உலக மொழி தேவை என்பதை மறுக்க முடியாது. எதிர் காலத்தில் விண்வெளியில் சந்திரமண்டலம், செவ்வாய் மண்டலம், போன்ற கோள்களில் ஏதேனும் உயிரினங்கள் இருக்குமானால் அவற்றுடனும் தொடர்பு கொள்ளக்கூடிய ஒரு மொழி தேவை.

ஆக, நம்மைப் பிரிப்பது மொழி அல்ல, மொழியைப் புரிந்து கொள்ளும் திறமைக் குறைவுதான் என்ற உண்மையை மக்கள் ஏற்றுக்கொண்டால், எல்லா நாடுகளுக்கும் ஒரு பொது மொழி உருவாகிவிடும். அப்போது, கடவுளுக்கும் வந்துபார் என்று சவால்விட்டு, மொழி வேறுபாடுகளுக்கும் இடையிலும், சொர்க்கத்துக்கு பாபேல் கோபுரத்தை கட்ட முடியும் என்பதை நிரூபிப்போம்.


1  2  3