• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-09-19 11:58:54    
உலகமெங்கும் ஒரே மொழி

cri

சீன மொழியைக் கற்றுக்கொள்ளும் அன்னியர்

இன்றைக்கு மனிதர்களிடையே மொழிப் போர் மூண்டு விட்டதற்குக் கடவுள்தான் காரணம் என்று சொல்ல வேண்டும். விவிலிய நூலிலே ஒரு கதை. ஆதியிலே வார்த்தை இருந்தது. அது தேவனாக இருந்தது என்றுதான் விவிலியத்தின் பழைய ஏற்பாடு தொடங்குகிறது. மனித குலம் இந்தப் பூமியில் தோன்றிய போது, எல்லாம் ஒரு ஒழுங்காக, சீராக இயங்கிக் கொண்டிருந்தது. காரணம், அப்போது ஒரே மொழி தான் இருந்தது. எனவே அவர்களால் செய்ய முடியாதது என்று எதுவுமே இருக்கவில்லை. அவர்கள் அனைவரும் ஒன்றுபட்டு சொர்க்கத்தை நோக்கி பிரம்மாண்டமான பாபேல் கோபுரம் கட்டத் தொடங்கினார்கள். கடவுளுக்கு இது பொறுக்கவில்லை. பிரம்மாண்டமான ஒரு கோபுரத்தைக் கட்டிவிட்டால் பூமியில் உள்ள மக்கள் தனது தயவு இல்லாமல் சொர்க்கத்துக்கு வந்து விடுவார்களே! அப்படியானால் தனது எல்லையற்ற அதிகாரம் என்னாவது? கடவுள் பயந்தார். கோபுரம் கட்டவிடாமல் எப்படித் தடுப்பது என்று சிந்தித்தார். இந்த மக்களின் ஒற்றுமையைச் சிதறடிப்பதற்கு ஒரே வழி, அவர்களிடையே குழப்பத்தை உண்டு பண்ண வேண்டும். குழப்பம் எப்போது வரும்? ஒருவரை இன்னொருவர் புரியாமல் போகும் போது தானாகவே குழப்பம் வந்து விடும். ஆகவே, மக்களை பூமியின் எல்லா இடங்களுக்கும் விரட்டி விட்டார். இதன் விளைவாக, பல பேச்சு மொழிகள் தோன்றி விட்டன.

சீன மொழியைக் கற்றுக்கொள்ளும் அன்னியர்

இது கடவுள் மனிதர்களிடையே நடத்திய நல்ல விளையாட்டு என்று நினைக்கத் தோன்றுகிறதா? வேடிக்கையான இந்த விளையாட்டு தான், இன்றைக்கு உலகின் பல இடங்களில் மொழிப் போர்களாக வெடித்து, மனிதர்களுக்கு இடையில் பகைமை உண்டாக்கி, உலக அமைதிக்கும் முன்னேற்றத்துக்கும் ஒரு பெரிய முட்டுக்கட்டையாகி விட்டது. இந்த மொழிவேறுபாடு ஏற்பட்டதற்கு உண்மைக்காரணம் என்ன என்பதை மானிடவியலார் ஆராயட்டும். பாமரமக்களாகிய நாம், மொழித்தடைகளை மீறி, உலக மயமாக்கத்தை நோக்கி எவ்வாறு முன்னேறுவது என்று பார்ப்போம்.

எதிர்காலத்தில் மனிதகுலம் முழுவதும் ஒன்றுபட்டு, ஒரே மொழி பேசுவது சாத்தியம் தானா? சந்தேகம் தான். ஒரு உலகமொழியை உருவாக்க சிலர் முயன்றனர். ஆனால் பயனில்லை. காரணம், மக்கள் மொழி வேறுபாடுகளுக்கு இடையே வாழ்ந்து பழகி விட்டனர்.

1  2  3