• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-09-26 17:25:37    
Zhong Xing தகவல் தொடர்பு நிறுவனம்

cri

Zhong Xing தகவல் தொடர்பு நிறுவனத்தின் தலைமை இயக்குநராக Hou Wei Gui திகழ்கிறார். இந்நிறுவனம், சீனாவில் மிக பெரிய தகவல் தொடர்பு சாதனங்களைத் தயாரிக்கும் நிறுவனமாக விளங்குகிறது. Hou Wei Guiயின் தலைமையில், Zhong Xing தகவல் தொடர்பு நிறுவனம், வல்லுநர்கள் நிறைந்து காணப்படும் சர்வதேச சந்தையில் வெற்றி பெற்றுள்ளது. இணையங்களுக்கான width bandஐ Athens ஒலிம்பிக் போட்டியின் திடல்களில் இந்நிறுவனம் போட்டது. செல்லிடப்பேசிகளை Nokia நிறுவனத் தலைமையகத்தில் விற்பனை செய்கின்றது. உலகில் 60க்கு அதிகமான நாடுகள் மற்றும் பிரதேசங்களில் தன் சந்தையை இது வளர்த்துள்ளது. கடந்த ஆண்டு, இந்நிறுவனத்தின் மொத்த வெளிநாட்டு விற்பனை வருமானம், 160 கோடி அமெரிக்க டாலரைத் தாண்டியுள்ளது. Zhong Xing தகவல் தொடர்பு நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சி பற்றி 63 வயதான Hou Wei Gui முழு நம்பிக்கையோடு பேசுகிறார்.

வட மேற்கு சீனாவில் 40 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து, பணி புரிந்துள்ள அவர், தென் சீனாவில் உள்ள Shen Zhen பொருளாதார சிறப்பு பிரதேசத்துக்கு வந்து, ஒரு சிறிய அளவிலான கூட்டு முதலீட்டு தொழில் நிறுவனத்தின் பொறுப்பாளர் பதவி ஏற்றார். அவரின் தலைமையில், இந்த சிறிய தொழில் நிறுவனம், சிறிய மின்னணு உதிரி பாகங்களைப் பதனீடு செய்தது முதல், சீன தகவல் தொடர்பு தொழிலின் முதுகெலும்பான நிறுவனமாக படிப்படியாக வளர்ச்சியுற்று வருகின்றது. தற்போது, Zhong Xing தகவல் தொடர்பு நிறுவனம், சீனாவில் மிக பெரிய உள்ளூர் வானொலிப் பெட்டி வினியோக நிறுவனமாகும். இதன் உற்பத்தி பொருட்கள், வானொலிப் பெட்டி, இணையம், செல்லிடப்பேசி ஆகிய மூன்று பெரிய தகவல் தொடர்பு துறைகளில் பரவுகின்றன. கடந்த ஆண்டு, இந்நிறுவனத்தின் விற்பனை வருமானம் 3 ஆயிரம் கோடி யுவானைத் தாண்டியது.

1  2  3