10 ஆண்டுகளுக்கு முன், புகழ் பெற்ற சர்வதேச தகவல் தொடர்பு நிறுவனங்கள் சீனாவின் சந்தையில் அடுத்தடுத்து நுழைந்த போது, Zhong Xing தகவல் தொடர்பு நிறுவனம், வெளிநாட்டுச் சந்தையை வளர்ப்பதை தனது முதன்மைப் பணியாக கொண்டது. அப்போது, இந்நிறுவனத்தின் ஆண்டு விற்பனை வருமானம் 10 கோடி அமெரிக்க டாலருக்குக் குறைவாக இருந்தது. இதன் சர்வதேச போட்டியாளரின், ஆண்டு விற்பனை வருமானம் குறைந்தது 600 கோடி அமெரிக்க டாலராகும்.
துவக்கத்தில், இந்த பெரிய நிறுவனங்களுடன் நேரடியாக போட்டியிடுவதை தவிர்க்கும் பொருட்டு, வளரும் நாடுகளைக் குறிக்கோளாக Zhong Xing தகவல் தொடர்பு நிறுவனம் கொண்டது. இதன் வெளிநாட்டு அலுவல் தெற்காசியா முதல், ஆப்பிரிக்கா, கிழக்கு ஐரோப்பா, தென் அமெரிக்கா ஆகியவற்றின் சில நாடுகளில் விரிவடைந்தது.
போட்டியாளருடன் ஒப்பிடும் போது, முன்னேறிய உற்பத்தி பொருட்கள், தொழில் நுட்பம், குறைவான விலை ஆகியவை, சர்வதேச சந்தை போட்டியில் Zhong Xing தகவல் தொடர்பு நிறுவனத்திற்கு ஆதாயமாக இருந்தது. Hou Wei Gui செய்தியாளரிடம் கூறியதாவது:
"தற்போது, எங்கள் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி பணியாளர்களில், சுமார் 6 ஆயிரம் முதுகலைப்பட்டம் பெற்றவர்களும் டாக்டர்களும் இருக்கின்றனர். ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி பணியாளர்களின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. ஐரோப்பிய அமெரிக்க நிறுவனங்களில், இத்தகைய பணியாளர்களின் ஊதியம் மிக அதிகம். சீனாவில் தொழில் நுட்பப் பணியாளர்கள் அதிகம். நீண்டகாலத்தில் உயர் தொழில் நுட்பம், குறைவான செலவு ஆகிய மேம்பாடு எங்களுக்கு கிடைக்க முடியும்" என்றார் அவர்.
தொழில் நுட்பம், உற்பத்தி பொருட்கள் ஆகியவற்றின் மேம்பாட்டுடன் ஒப்பிடும் போது, சர்வதேச சந்தையில் நுழைந்த பின், விற்பனைக்குப் பிந்திய சேவை Zhong Xing தகவல் தொடர்பு நிறுவனம் எதிர்நோக்குகின்ற ஒரு கடினமான அறை கூவலாகும். விற்பனைக்குப் பிந்திய சேவை பிரச்சினையைத் தீர்த்து, அதிகமில்லாத வெளிநாட்டு சந்தையை மேலும் விரிவாக்கும் பொருட்டு, வெளிநாடுகளுக்கு அதிகப்படியான தொழில் நுட்பப் பணியாளர்களை இந்நிறுவனம் அனுப்பியுள்ளது. தவிர, வெளிநாடுகளிலான பணியாளர்களின் தேசியமயமாக்கம் எனும் குறிக்கோள்ளை முன்வைத்துள்ளது. தற்போது, இந்நிறுவனத்தின் வெளிநாட்டு குடி உரிமையுடையவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. விற்பனைக்குப் பிந்திய தொடர் அமைப்பு உலகளவில் பரவி விட்டது. Hou Wei Gui எடுத்துக்கூறியதாவது:
"இந்த சேவை தொடர் அமைப்பை உருவாக்குவதற்கு அதிக பணம் செலவாகின்றது. ஆனால், வெளிநாடுகளில் சேவை பிரச்சினையைத் தீர்க்க வேண்டும். எதிர்காலத்தில் இது வாடிகையாளருக்கு கவலையை ஏற்படுத்துவதில்லை. துவக்கத்தில் Zhong Xing தகவல் தொடர்பு நிறுவனம் நுழைந்த சில நாடுகளில், எடுத்துக்காட்டாக இந்தியா மற்றும் பாக்கிஸ்தானில் எங்கள் விற்பனைக்குப் பிந்திய சேவைப் பணியாளர்கள் அதிகம். இந்தியாவில் 300க்கு அதிகமான பணியாளர்கள் இருக்கின்றனர். அவர்களில் உள்ளூர் பணியாளர்கள் சுமார் 60 விழுக்காட்டினர். பாக்கிஸ்தானில் உள்ள சுமார் 400 பணியாளர்களில் உள்ளூர் பணியாளர்களின் எண்ணிக்கை, 70 விழுக்காட்டுக்கு அதிகமாகும்." என்றார் அவர்.
1 2 3
|