• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-09-26 17:25:37    
Zhong Xing தகவல் தொடர்பு நிறுவனம்

cri

வெளிநாட்டு குடி உரிமை உடைய பணியாளர்களின் தொழில் நுட்ப நிலையை உயர்த்தும் பொருட்டு, சீனாவின் Shen Zhen நகரில் உள்ள தமது தலைமையகத்தில் அவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு இந்நிறுவனம் முறையாக ஏற்பாடு செய்துள்ளது.

Hou Wei Guiயின் தலைமையில், Zhong Xing தகவல் தொடர்பு நிறுவனத்தின் அன்னிய சந்தை நாளுக்கு நாள் விரிவடைந்துள்ளது. Siemens, Nokia உள்ளிட்ட சர்வதேச முதுகெலும்பான தகவல் தொடர்பு நிறுவனங்கள் நீண்டகாலமாக கைபற்றியுள்ள வளர்ச்சியடைந்த நாடுகளின் சந்தைகளில் நுழைந்துள்ளது. இந்நிறுவனங்களுடனான போட்டியில், Zhong Xing தகவல் தொடர்பு நிறுவனம் தனது ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு, இந்நிறுவனம் சீனாவில் தயாராகும் width band வசதிகளை Athens ஒலிம்பிக் போட்டியின் திடல்களில் போட்டது. ஒலிம்பிக் போட்டிக்கு தகவல் தொடர்பு சேவையை வழங்கும் முதலாவது சீன நிறுவனம் இதுவாகும். Alcatel, Siemens உள்ளிட்ட பல பெரிய தகவல் தொடர்பு நிறுவனங்கள் Zhong Xing தகவல் தொடர்பு நிறுவனத்துடன் போட்டி யிட்டன.

உற்பத்தி பொருட்களின் தரத்தில் Zhong Xing தகவல் தொடர்பு நிறுவனம் போட்டியாளருடன் ஏறக்குறைய சமநிலையில் இருக்கின்றது. ஆனால் இதன் விலை மிகவும் மலிவு. கடந்த ஆண்டு Athens ஒலிம்பிக் போட்டியின் முக்கிய திடல், செய்தி மையம் உள்ளிட்ட 16 முக்கிய திடல்கள் மற்றும் அரங்குகளின் தகவல் தொடர்பு இணைய திட்டப்பணிகளின் கட்டுமான உரிமையை Zhong Xing தகவல் தொடர்பு நிறுவனத்துக்கு வழங்குவதென கிரேக்க தொலை தகவல் தொடர்பு நிறுவனம் இறுதியில் தீர்மானித்தது. கட்டுமான போக்கில், Zhong Xing தகவல் தொடர்பு நிறுவனத்தின் தொழில் நுட்ப பணியாளர்களின் ஈடுபாடும், தொழில் நுட்ப நிலையும் கிரேக்க தொலை தகவல் தொடர்பு நிறுவனத்தால் பாராட்டப்பட்டுள்ளன.

Athens ஒலிம்பிக் போட்டியின் தகவல் தொடர்பு இணைய திட்டப்பணிகளின் கட்டுமானத்தை Zhong Xing தகவல் தொடர்பு நிறுவனம் சிறப்பாக நிறைவேற்றியதால், ஐரோப்பிய சந்தையில் இது செல்வாக்கை பெற்றுள்ளது. தற்போது, இதன் அலுவல், பிரான்சு, ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கும் விரிவடைந்து வருகின்றது. இந்நிறுவனத்தின் வளர்ச்சி போக்கு குறித்து, Hou Wei Gui மனநிறைவு அடையவில்லை. உலகமயமாக்கப் பாதையில் Zhong Xing தகவல் தொடர்பு நிறுவனம் வளர்ச்சியடைய உள்ளதாக செய்தியாளரிடம் அவர் கூறினார்.


1  2  3