• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-09-28 10:01:43    
குழந்தைகளின் கலை திறமை

cri

கடந்த சில ஆண்டுகளாக தென்மேற்கு சீனாவில் அமைந்துள்ள குய் சோ மாநிலத்தின் தலைநகரான குய் யாங் நகரில், குழந்தைகளின் கலை திறமையில் பள்ளிகளும் பல்வேறு சமூக வட்டாரங்களும் கவனம் செலுத்தி வருகின்றன. குழந்தைகள் அரங்கேற்றும் பாடலும் நடனமும் அதிகமான தேசிய இன தனிச்சிறப்புடையன. இவை உள் நாட்டிலும் வெளிநாடுகளிலும் உயர்ந்த மதிப்பீட்டை பெற்றுள்ளன. இன்றைய நிகழ்ச்சியில், குய் யாங் நகரில் விறுவிறுப்பாக வளர்ந்து வரும் குழந்தை கலைகளை அறிமுகப்படுத்துகின்றோம்.

ஜுன் திங்களில் ஒரு நாளில் எமது செய்தியாளர் குய் யாங் நகரிலுள்ள சியௌ குவா எனும் கலை குழுவைச் சேரந்த சே யுசு எனும் சிறுமியைப் பேட்டி கண்டார். தமது கலை குழுவின் நிகழ்ச்சிகள் மிகவும் வரவேற்புப் பெற்றுள்ளன என்றும் குழுவினர்களுடன் சேர்ந்து பல நகரங்களிலும் சில வெளிநாடுகளிலும் நிகழ்ச்சிகளை அரங்கேற்றியுள்ளதாகவும் சே யுசு கூறினார்.

பல இடங்களுக்குச் சென்று அரங்கேற்றினோம். ஆடல் பாடலில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றோம். விரைவில் ஹாங்காங்கிற்குச் சென்று ஒரு போட்டியில் கலந்து கொள்வேன். பல சர்வதேச கலை போட்டிகளில் பரிசுகளை பெற்றுள்ளோம். இவற்றை நான் பெரிதாக நினைக்கவில்லை. ஒலிம்பிக் சர்வதேச கூட்டுப்பாடல் குழுப் போட்டியில் வெண்கல பரிசு பெற்ற இவற்றில் மிக உயர்ந்த பரிசாகும் என்றார் இந்த சிறுமி.

சியோ குவான் கலை குழு போன்ற குழந்தை கலை குழுக்கள் குய் யாங் நகரில் நிறைய உள்ளன. சாலையில் நடக்கும் போது, பல்வேறு வகையான குழந்தைக் கலை குழுக்களின் விளம்பர அட்டைகளைக் காணலாம். குழந்தைகள் அரங்கேற்றிய போது எடுத்த நிழற்படங்கள் ஜன்னலில் வைக்கப்பட்டுள்ளன. தவிர, அரங்கேற்றப் போட்டியில் பெற்ற பரிசு கோப்பைகளும் உள்ளன. குய் சோ மியௌ இன ஊர், பெய்ஜிங் இசை மண்டபம், பிரான்ஸ், அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி ஆகியவற்றுக்கு அவர்கள் சென்று, கீழை குழந்தைகளின் கலைத் திறமையை பார்வையாளர்களுக்கு வெளிப்படுத்துகின்றனர். இவற்றில், ஒரு குழந்தை மையத்தைச் சேர்ந்த கலைக் குழு கடந்த 20 ஆண்டுகளில், மொத்தம் 1200க்கு அதிகமான சர்வதேச பரிசுகளை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

1  2  3