குய் யாங் நகரில் மட்டும் குழந்தைகள் கலை திறமை ஏன் இவ்வளவு அதிகமாக இருக்க வேண்டும்? இது பற்றி, குய் யாங் நகர் ஆடல் பாடல் குழுவின் முதல் நிலை பயிற்சியாளர் யாங் கேய் லியாங் எடுத்து கூறினார். இப்போது ஓய்வு பெற்ற அவர் பயிற்றுவித்த பல குழந்தை கலை படைப்புக்கள் பன்முறை நாட்டிலும் உலகிலும் பரிசு பெற்றுள்ளன. அவர் கூறியதாவது,
குய் யாங் நகரில் குழந்தை நடனத்தின் தனிச்சிறப்பு தேசிய இன பாணியாகும். தேசிய இன தனித்தன்மை உலகின் அங்கீகரிப்பைப் பெற்றுள்ளது. எனவே, தேசிய இன தன்மை, குழந்தைகளின் வாழ்க்கை ஆகியவற்றின் இணைப்பு குய் யாங் குழந்தைக் கலையின் தனிச்சிறப்பாகும். ஆகையால், இதனை கண்டுகளித்த பலர் மகிழ்ச்சி அடையவர் என்றார் அவர்.
குய் யாங் நகரில் மியௌ, து ஜியா, துங் உட்பட பல தேசிய இனங்கள் உள்ளன. குழந்தை கலை வளர்ச்சியில் தேசிய இன தனிச்சிறப்புக்கு மிகவும் முக்கியத்துவம் தரப்பட்டுகின்றது.
எடுத்துக்காட்டாக, மியௌ விழாவை வர்ணிக்கும் ஒரு நடனத்தில் மியௌ இன மேளம், லு சென் எனும் இசை கருவி ஆகியவற்றின் இசையுடன், சில மியௌ இன சிறுமிகள் ஆடுகின்றனர். சிறுமிகள் ஆடலுக்குரிய உடையில்லாத வேறு ஒரு சிறுமிக்கு உடை கொடுத்து அவரை நடனத்தில் பங்கெடுக்க அழைக்கின்றனர். இத்தகைய நிலைமை, மக்களுக்கு ஒரு தகவலை அனுப்புகின்றது. அதாவது, பிறருக்கு மகிழ்ச்சியை வழங்கும் போது, தானே மேலும் அதிகமான மகிழ்ச்சி பெறலாம்.

கடந்த நூற்றாண்டின் 80ஆம் ஆண்டுகளில், ஒரு கலை ஆசிரியர் மியௌ மியௌ எனும் குழந்தை கலைக் குழு ஒன்றை உருவாக்கினார். அப்போது முதல் குழந்தைக் கலை குய் யாங்கில் வளர தொடங்கியது. குய் யாங் நகராட்சியும் இத்தகைய கலை வடிவத்துக்கு ஊக்கம் தருகின்றது. குய் யாங் பண்பாட்டு அலுவலகத்தின் சமூக பண்பாட்டு நிர்வாக பிரிவின் தலைவர் தங் சியுங் கூறியதாவது
சுருங்க கூறின், 4 துறைகளில் குழந்தைக் கலையில் முக்கியத்துவம் அளிக்கின்றோம். ஒன்று, அடிப்படை வசதிகளை உருவாக்குவது. இரண்டு, குழந்தை கலைக்கான கல்வி. மூன்று, நடவடிக்கைகளை ஏற்பாடு செய்கின்றோம். நான்கு, பயிற்சிகளில் முக்கியத்துவம் அளிக்கின்றோம். குய் யாங்கில் பல்வேறு தேசிய இனங்கள் உள்ளன. தேசிய இன தனிச்சிறப்பு எமது குழந்தைக் கலையின் உயிர் நாடி என்றார் அவர்.
1 2 3
|