குய் யாங் நகரில் குழந்தைகள் எல்லாம் ஓய்வு நேரத்தில் பல்வேறு குழந்தைகள் மையங்கள் மற்றும் கலைக் குழுக்களிடம் பயிற்சி எடுக்கின்றனர். கல்விக்கு இத்தகைய பயிற்சி பாதிப்பு ஏற்படுத்தாது. இது மட்டுமல்ல, ஆசிரியர்களும் பெற்றோர்களும் குழந்தைகளின் தனிச்சிறப்பு, விருப்பம் ஆகியவற்றின் படி குழந்தைகளுக்கு கலை பயிற்சி அளிக்கின்றனர். பயிற்சியின் போது, குழந்தைகள் விரும்பிப் பங்கேற்று மகிழ்ச்சி அடைகின்றனர். குழந்தைகள் மையம் ஒன்றின் பொறுப்பாளர் சேன் லு அம்மையார் கூறியதாவது,
எமது மையத்தில் குழந்தைகள் சிறந்த கலைப் பயிற்சியை பெறலாம். அவர்கள் இன்பமாகவும் மகிழ்ச்சியாகவும் வளர வேண்டும் என்றும் அவர்கள் சொந்த முயற்சி மூலம் கனவை நனவாக்க வேண்டும் என்றும் விரும்புகின்றோம் என்றார் அவர்.
மத்திய இசை கழகம், ஷாங்காய் இசை கழகம், பெய்ஜிங் நடன கழகம் போன்ற சீனாவின் முக்கிய கலை கழகங்களுக்கும் குய் யாங் நகர் பெரும் எண்ணிக்கையிலான சிறந்த கலை வல்லுநர்களை அனுப்பியுள்ளது. அவர்களில் சிலர் சீன அரங்கில் புகழ்பெற்றவராக மாறியுள்ளனர்.
குய் யாங் கலைக் குழுக்களின் நிகழ்ச்சிகள் அடிக்கடி சீன தேசிய தொலை காட்சி மற்றும் உள்ளூர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் காட்டப்படுகின்றன. அவை, நாட்டின் 36 கோடி குழந்தைகளுக்கு மகிழ்ச்சி தருகின்றன.
1 2 3
|