• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-09-30 21:50:13    
திபெத்தின் கட்டிடக்கலை நிபுணர்

cri

போத்தலா மாளிகை

சீன திபெத்தில், திபெத் பாணியிலான பாரம்பரிய கட்டிடங்கள் மக்களின் கவனத்தை ஈர்க்கின்றன. இந்த கட்டிடங்கள், ஆயிரம் ஆண்டுகாலம் தாக்குப் பிடித்து, திபெத் பண்பாட்டின் ஒரு முக்கிய பகுதியாக விளங்குகின்றன. இன்று அவற்றைப் பேணிக்காப்பது, திபெத் பண்பாட்டுப் பாதுகாப்பில் ஒரு முக்கிய பிரச்சினையாகி விட்டது. இன்றைய நிகழ்ச்சியில், உங்களுக்கு திபெத் பாணி உடைய கட்டிடக்கலை நிபுணர் Qujijiancai என்பவரை அறிமுகப்படுத்துகின்றோம்.

நீண்டகாலமாக திபெத் பாரம்பரிய கட்டிடங்களைப் பேணிக்காக்கும் பணியில் ஈடுபட்டு வரும் அவர், திபெத் கட்டிட ஆய்வு மற்றும் வடிவமைப்புக் கழகத்தின் பண்டைக்கால ஆய்வகத்தின் தலைவராவார். 1948ம் ஆண்டு Si Chuan மாநிலத்தின் Kang Ding மாவட்டத்தில் சாதாரண குடும்பத்தில் அவர் பிறந்தார். அது, திபெத் வழி புத்தமதம் பரவிய பகுதியாகும். இளம் பருவத்தில் அப்போதைய பெரும்பாலான மக்களைப் போல் இவரும் அருகில் உள்ள கோயில்களில் மதக்கல்வி கற்றுக்கொண்டார். 18 வயதான பிறகு அவர் கட்டிடத்தலத்தில் கட்டிடத் தொழிலாளரானார். கட்டிடக் கலையில் அவருக்கு மிகுதியும் அக்கறை ஏற்பட்டது. தமது ஆசிரியரிடம் தொழில் நுட்பத்தைக் கற்றுக் கொள்வதோடு, சொந்தமாக சீன மொழியையும் கற்றுக்கொண்டார். இவ்வாறு, திபெத் மொழியும் சீன மொழியும் நன்கு தெரிந்து கொண்ட ஒரு தொழில் நுட்ப தொழிலாளராக மாறினார். பின்னர், கட்டிட வடிவமைப்பு பயிற்சி வகுப்பில் அவர் சேர்க்கப்பட்டார். வகுப்பில் சிறந்து விளங்கியதால், படிப்பை முடித்துக் கொண்ட பின், திபெத் கட்டிட ஆய்வு வடிவமைப்புக் கழகத்தில் அவர் ஈடுபடுத்தப்பட்டார். இவ்வரலாறு பற்றி குறிப்பிடுகையில் அவர் கூறியதாவது:

"நான் சொந்தமாக ஆசிரியரிடம் கற்றுக்கொண்டேன். பின்னர், எனது திபெத் பண்பாட்டின் அடிப்பையில் கட்டிடக் கலை ஆய்வில் ஈடுபடத் துவங்கினேன். முன்னர் கோயிலில் நான் மதப் பண்பாட்டைக் கற்றுக்கொண்டேன். அன்றி திபெத் பண்பாட்டையும் ஆராய்ந்தேன். எனவே, திபெத் பண்டைக்கால கட்டிக்கலை ஆய்வில் ஈடுபடுவதற்கு இவை சிறந்த அடிப்படையாக உள்ளன." என்றார், அவர்.

1  2  3