• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-09-30 21:50:13    
திபெத்தின் கட்டிடக்கலை நிபுணர்

cri

Norbulingka

1980ம் ஆண்டு முதல், திபெத் கட்டிட ஆய்வு மற்றும் வடிவமைப்புக் கழகத்தில் திபெத் பண்டைக்கால கட்டிடக் கலை ஆய்வில் அதிகாரப்பூர்வமாக ஈடுபடத் துவங்கினார். ஆய்வாளர்கள் பலருக்குத் தலைமை தாங்கி, கடினமான கவனமான களஆய்வு மூலம் Jokhang கோயில், Norbulingka, Guge மன்னராட்சி மற்றும் போத்தலா மாளிகை உட்பட, திபெத் பண்டைக்கால கட்டிடங்கள், வரலாற்று திறப்புமிக்க கட்டிடங்கள் பற்றிய தொழில்முறை கட்டிட வரைபட நூலைத் தயாரித்து வெளியிட்டார். சீன தேசிய தொல் பொருள் பணியகம் உள்ளிட்ட பல நிறுவனங்கள் இப்போதும் இந்நூல்களைப் பயன்படுத்துகின்றன. Qujijiancaiஉம் இதர பண்டைக்கால கட்டிடக்கலை நிபுணர்களும், ஆழ்ந்த செல்வாக்கு உடைய புத்தாக்க பணி புரிந்துள்ளனர் என்று கூறலாம்.

திபெத்தின் பண்டைக்கால கட்டிடங்களைப் பாதுகாக்கும் பணியில் சீன அரசு மிகவும் கவனம் செலுத்துகின்றது. இக்கட்டிடங்களை பழுதுபார்ப்பதற்கென, பல முறை நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. 1987ம் ஆண்டு, Samye கோயிலை பராமரிப்பதற்கான வடிவமைப்பு பணிக்கு Qujijiancai பொறுப்பேற்றார். Samye கோயில் திபெத்தின் Lhoka பிரதேசத்தின் யலுசாங்புசியாங் ஆற்றின் வட கரையில் அமைந்துள்ளது. கி.பி. எட்டாவது நூற்றாண்டின் நடுப்பகுதியில் இது கட்டப்பட்டது. திபெத்தில் மிகவும் நீண்டநெடும் வரலாறுடைய பிரபலமான கோயில் இது. கி.பி. 8வது நூற்றாண்டு முதல், திபெத்தின் பல்வேறு காலகட்டங்களில் வரலாறு, மதம், கட்டிக்கலை, சுவர் ஓவியம், சிற்ப வேலை முதலிய மரபுச்செல்வங்கள் இக்கோயிலில் மறைத்து வைக்கப்பட்டுள்ளன. திபெத் இனத்தின் பண்டைக்கால, தனித்தன்மை மிக்க பண்பாட்டு கருவூலங்களில் இதுவும் ஒன்றாகும்.

Jokhang கோயில்

அப்போது இக்கோயின் உள்புறம், கடுமையாக பாதிக்கப்பட்டது. பார்த்து சீர்செய்வதற்கு கோயில் பற்றிய வரைபடம் எதுவுமில்லை. கடந்த நூற்றாண்டின் 40ம் ஆண்டுகாலத்தில் எடுக்கப்பட்ட பழைய புகைப்படம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இருப்பினும், பாரம்பரிய முறைப்படி இக்கோயில் பராமரிக்கப்பட வேண்டும். மேலும், கோயிலின் லாமாக்களால் அது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும், அவர் இக்கடினமான பணிக்கு பொறுப்பு ஏற்றார். கோயிலுக்கு அருகில் வாழும் முதியவர்களை அவர் சென்று பார்த்து, இது போன்ற கட்டிடங்களின் தரவுகளைப் படித்து, கோயிலின் லாமாக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தார். இறுதியில், அவர் தமக்கிருந்த பண்டைய கட்டிட வடிவமைப்பு பற்றிய அடிப்படை அறிவையும், ஆழ்ந்த பண்பாட்டு அறிவையும் பயன்படுத்தி, கோயிலின் இயல்பான படத்தைப் படிப்படியாக வரைந்து வந்தார். பராமரிக்கப்பட்ட பிந்திய கோயிலின் மாதிரியை லாமாக்களிடம் காட்டுவதற்காக, அவர், Samye கோயிலின் மாதிரி ஒன்றைத் தயாரித்தார். அவர் கூறியதாவது:

"ஒன்றுக்கு பத்து என்ற அளவில் நான் இம்மாதிரியை வரைந்த போதிலும், இதிலுள்ள ஒவ்வொரு முதுகெலும்பையும் தூணையும் எண்ணிவிடலாம் என்றும் அவர் தெரிவித்தார்." வாமாக்கள் இதைப் பார்த்த பிறகு கண்ணீர் விட்டனர். "எங்கள் மனதிலுள்ள Samye கோயில் போல உண்மையிலேயே உள்ளது. இதைச் செப்பனிடலாம்." என்று அவர்கள் கூறினர்.

1  2  3