• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-09-30 21:50:13    
திபெத்தின் கட்டிடக்கலை நிபுணர்

cri

Samye கோயில்

Qujijiancai, தொழில் நுட்ப வல்லுநர்களுக்குத் தலைமை தாங்கி, Samye கோயில் இறுதியில் வெற்றிகரமாக செப்பமிடப்பட்டது. இத்திட்டப்பணி, உள்ளூர் மத வட்டாரத்தாலும், பண்டைக்கால கட்டிடக்கலை பிரமுகர்களாலும் பாராட்டப்படுகின்றது. Qujijiancai தயாரித்த மாதிரிக் கோயில், இப்போதும் இக்கோயிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இன்று வரை, போத்தலா மாளிகை, Tsahilhungpo கோயில், திபெத் மன்னா கல்லறையின் கற்சாசனம், Zhai Bung கோயில் முதலிய, திபெத்தின் பண்டைய கட்டிடங்கள் மற்றும் தொல் பொருள்களின் பராமரிப்பு பாதுகாப்பு பணியில் Qujijiancai அடுத்தடுத்து கலந்து கொண்டார்.

பாரம்பரிய திபெத் பாணியுடைய கட்டிடங்களில், முக்கியமாக, அரண்மனை, குடி மக்கள் இருப்பிடம், தோட்டம், கோயில் ஆகியவை இடம்பெறுகின்றன. இக்கட்டிடங்களில், திபெத் இன பண்டைய கட்டிடக்கலையின் அறிவியல் தொழில் நுட்ப சாதனைகள் அடங்கும். கட்டிடக்கலையில் கற்றுக்கெண்டு பயன்படுத்தப்படக்கூடியவை அதிகம் என்று அவர் எடுத்துக்கூறினார்.

Samye கோயில்

"திபெத்தின் பண்டைக்கால கட்டிடங்கள், எங்கள் சீன நாட்டின் கட்டிடகலை பண்பாட்டில் தனித்தன்மை வாய்ந்தவை. இது மட்டுமின்றி, உலக கட்டிடக்கலை பண்பாட்டுத்துறையிலும் தனிச்சிறப்புடையது. 21வது நூற்றாண்டின் கட்டிடக்கலையில், சமூக இயல், சூழல், இயற்கை ஆகியவை சிறப்பாக வலியுறுத்தப்படுகின்றன. எங்கள் திபெத்திய பண்டைக்கால கட்டிடங்கள், இத்தகைய நிலைமைக்குப் பொருந்திய தனித்தன்மை உடையவை. நிலைமைக்கும் அறிவியல் துறையின் வளர்ச்சிக்கும் இது பின்தங்காது. இதற்கு மிக வலுவான உயிராற்றல் உண்டு." என்றார், அவர்.

தற்போது, ஓய்வு பெற்ற பிறகு, திபெத் பல்கலைக்கழக பொறியியல் கல்லுரியில் கட்டிடக்கலைத் துறைப் பேராசிரியராகப் பணி புரிகின்றார்.


1  2  3