• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-10-11 18:12:29    
துருவ அறிவியல் ஆய்வு

cri

வட துருவம் கடும் குளிரான துருவ பிரதேசமாகும். சீனா வடக்கு அரை கோளத்தைச் சேர்ந்த நாடு. எனவே வடதுருவ வானிலை சீனாவை நேரடியாக கட்டுப்படுத்துகின்றது. ஆகவே வட துருவ பிரதேசத்தின் வானிலையின் மாற்றத்தில் நாங்கள் மேலும் கவனம் செலுத்த வேண்டும். இந்த சூழ் நிலையில் வட துருவத்தில் முக்கிய ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று சியு தைய் யூ கூறினார்.

1999ம், 2003ம் ஆண்டுகளில் சீனா இரண்டு முறை வட துருவத்தில் அறிவியில் ஆய்வு மேற்கொண்டது. "சியே லூன்"எனும் அறிவியல் ஆய்வு கப்பலை அடிப்படை தளமாக கொண்டு ஆர்க்டிக் கடல் பரப்பில் 3000 மீட்டர் ஆழமான கடலடியில் உள்ள பொருட்களையும் 3100 மீட்டர் உயரமான விண்வெளியின் நிலைமை பற்றிய தகவல்களையும் சீன ஆய்வாளர்கள் ஆராய்ந்து மாபெரும் மதிப்புமிக்க தகவல்களை பெற்றுள்ளனர்.

கப்பல் பிரச்சினைகளால் சீனா வட துருவத்தில் தொடர்ச்சியாக அறிவியல் ஆய்வுகளை விரிவாக்க முடியாமல் போயிற்று. 2004ம் ஆண்டில் சீனா முதல் தடவையாக வட துருவப் பிரதேசத்தில் அறிவியல் ஆய்வு நிலையத்தை நிறுவியுள்ளது. நிலையத்தை கட்டியமைக்கும் கடமைக்குப் பொறுப்பு ஏற்றிய லீ சன் சியேன் இது பற்றி கூறினார். அவர் கூறியதாவது..

2004ம் ஆண்டு நார்வேயின் SPITSBERGEN தீவுகளில் உள்ள NY-ALESUND பிரதேசத்தில் சீனா வட துருவ அறிவியல் ஆய்வு நிலையத்தை நிறுவியது. மஞ்சள் ஆறு எனும் பெயர் இந்நிலையத்துக்கு சூடப்பட்டது. புவி இயற்பியல், வானிலை, அளவீடுதல், நிலவியல் போன்ற அறிவியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. ஏராளமான தகவல்கள், மாதிரி பொருட்கள் பெறப்பட்டன. நீண்டகாலமாகவும் தொடர்ச்சியாகவும் வட துருவத்தின் அறிவியல் ஆய்வுக்கு உறுதியான அடிப்படை இடப்பட்டுள்ளது என்றார் அவர்.

1  2  3  4